ஆளுமை:ஆறுமுகம், சி.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:19, 27 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஆறுமுகம், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆறுமுகம், சி.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி.ஆறுமுகம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மேற்கொண்டார். தமிழ்த் துறைப் பேராசிரியாக விளங்கிய இவர் எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ் இந்துக்கல்லூரி தமிழ்த்துறை பேராசானாகவும் விளங்கினார்.

இவர் இந்துக் கல்லூரியின் கல்வி வளர்ச்சியிலும், அபிவிருத்திப் பணிகளிலும் அரும்பாடுபட்டு உழைத்து நன்மதிப்பு பெற்றவர் ஆவார். புங்குடுதீவு தல்லைப்பற்று முருகமூர்த்தி ஆலயத்தின் பரிபாலன சபைத் தலைவராக இருந்து சமயப் பணியாற்றினார்.

'நல்லூரான் நாற்பது' எனும் கவிதை நூலால் கவிதை உலகில் பாராட்டப்பட்ட இவர் மாதகல் வ.கந்தசாமியுடன் இணைந்து 'கலைமதி' எனும் சஞ்சிகையை நடத்தினார். அத்துடன் புலவர் ஈழத்துச் சிவானந்தனின் 'ஈழத்துச் சொற்செல்வர்கள்' என்னும் நூலில் சிறந்த சொற்பொழிவாளராக இவர் குறிப்பிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 189-190
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆறுமுகம்,_சி.&oldid=157284" இருந்து மீள்விக்கப்பட்டது