ஆளுமை:குகபாலன், கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:08, 26 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குகபாலன், க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குகபாலன், கா
தந்தை கார்த்திகேசு
தாய் பொன்னம்மா
பிறப்பு 24.02.1948
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கா.குகபாலன் அவர்கள் புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் ஆரம்பக் கல்வியை புங்குடுதீவு சித்தி விநாயகர் வித்தியாலயம், நுவரெலியா திருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். உயர் கல்வியை யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் பயின்று பேராதனை பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டு 1971 ஆம் ஆண்டு புவியியற்துறை சிறப்பு கலைப் பட்டதாரியாக வெளியேரிய இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். குடிசன தொகைக் கல்வியில் கொண்ட ஆர்வம் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு சென்று டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்

1972ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும், 1979ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். பின்னர் 1977ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டு அடுத்த ஆண்டு முதல் புவியியற்துறை தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

பேராசிரியர் கா.குகபாலன் இதுவரை 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளதோடு பத்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் 1994இல் தனது தாயாரின் நினைவாக தீவகம் வளமும் வாழ்வும் என்ற நூலை எழுதினார். இதற்கு சாகித்திய மண்டல பரிசும், வட கிழக்கு மாகாண சாகித்திய பரிசும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 175-176