ஆளுமை:செல்வநாயகம், சோமசுந்தரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:13, 26 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்வநாயகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வநாயகம், சோமசுந்தரம்
தந்தை சோமசுந்தரம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசுந்தரம் செல்வநாயகம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். ஆரம்பக் கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியிலும், பெற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டு புவியியல் சிறப்பு பட்டதாரியாக வெளியேறித் தான் படித்த பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராக கடமையாற்றினார்.

சிலகாலம் நைஜீரியா அகமது பொல்லோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் 1977ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது புவியியற்துறைப் பேராசிரியராகவும் பின்பு தலைவராகவும் விளங்கி அப்பல்கலைக்கழக வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்.

இவர் தென்மராட்சி தென்னை அபிவிருத்திப் பணிகளுக்கு புவியியற்துறை ஆலோசகராக விளங்கியதுடன் தென்மராட்சி பகுதியில் சமூக பொருளாதார ஆய்வொன்றினை மேற்கொண்டு அவர் எழுதிய பூர்வாங்க அறிக்கை எமது மக்களுக்கு பயனுள்ள ஒன்றாகும். யாழ் பல்கலைக்கழக மன்றங்கள் மூலம் அவர் தமிழுக்கும் சைவத்துக்கும் தம்மாலான பணிகளைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 174