ஆளுமை:சிவசாமி, விநாயகமூர்த்தி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:48, 25 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவசாமி, வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவசாமி, விநாயகமூர்த்தி
தந்தை விநாயகமூர்த்தி
பிறப்பு 16.09.1933
இறப்பு 08.11.2014
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விநாயகமூர்த்தி சிவசாமி புங்குடுதீவில் இறுப்பிட்டி என்னும் ஊரைச் சேர்ந்த கல்வியியலாளர். இவர் தனது ஆரம்பக் கல்வியை புங்குடுதீவிலும், பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்று 1955 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், தமிழ், வரலாறு ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். 1961 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பாளி, இந்திய வரலாறு ஆகியவற்றுடன், சமஸ்கிருதத்தில் சித்தியடைந்து சிறப்புப் பட்டமும் பெற்றார். இவ்வாறு சித்தியடைந்த ஒரேயொரு இலங்கைத் தமிழர் இவரேயாவார்.

யாழ்ப்பாணக் கல்லூரியில் 1958 முதல் 1974 வரை ஆசிரியராகப் பணியாற்றிய இவர் இடையில் 1962 முதல் 1965 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974 இல் ஆரம்பிக்கப்பட்ட போது, சிவசாமி அதன் ஆரம்பகால விரிவுரையாளராப் பணியில் சேர்ந்தார். சமஸ்கிருதத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசாமி, வரலாறு, இந்து நாகரிகம் ஆகிய பாடங்களையும் கற்பித்தார்.

1973ஆம் ஆண்டு திராவிடர் ஆதி வரலாறும் பண்பாடும் என்ற இவரது முதலாவது நூல் வெளியானது. பின்னர் தென்னாசிய கலை மரபில் நாட்டிய சாஸ்திர மரபு, தமிழும் தமிழரும், இந்துப் பண்பாடு அன்றும் இன்றும், தொல் பொருளியல் அறிமுகம் போன்ற பல நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இவற்றில் இவருடைய சமஸ்கிருத இலக்கியச் சிந்தனைகள் என்னும் நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. அத்தோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 1999இல் நடைப்பெற்ற வெள்ளிவிழாப்பட்டமளிப்பு விழாவில் இவருக்கு கௌரவ இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 172-174

வெளிஇணைப்பு