ஆளுமை:திருநாவுக்கரசு, அம்பலவாணர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:13, 25 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=திருநாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருநாவுக்கரசு, அம்பலவாணர்
தந்தை அம்பலவாணர்
தாய் செல்லம்மா
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமயப் பெரியார்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பவாணர் திருநாவுக்கரசு புங்குடுதீவு 1ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமயப் பெரியார். இவர் புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலையிலும், வேலணை மத்திய மகாவித்தியாலயத்திலும் கல்வி கற்றதோடு அண்ணாமலைப் பல்க்லைக்கழகத்தில் பட்டம் பெற்று தருமபுர ஆதீனத்தில் சிறப்புக் கல்வி பெற்றார். புலவர் பட்டம் பெற்ற இவருக்கு கலாசார அமைச்சு சிவநெறிப்புலவர், என்றும் திரு ஆவடுதுறை ஆதீனம் சிவஞானச்செல்வர் என்றும் பட்டங்களை வழங்கியுள்ளன.

1964 முதல் இன்று வரை திருக்கேதீஸ்வர ஆலயத்துடன் தொடர்புடைய இவர் இவ்வாலயத்தின் திருப்பணிச் சபையின் பொதுச் செயலாளராக இருந்து சேவை புரிகிறார். அத்தோடு அகில இலங்கை இந்து மாமன்றாம், இந்து வெளியீட்டுக் குழு, கொழும்பு தமிழ்ச் சங்க ஆட்ச்சிக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்து சேவையாற்றி வருகிறார். தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மாலைதீவு போன்ற நாடுகளில் நடைப்பெற்ற சைவ இலக்கிய மாநாடுகளில் இவர் கலந்து கொண்டுள்ளார்.

இவர் சமயப் பணிகளுடன் சமூகப் பணிகளும் செய்தவர் ஆவார். பெரியநாவற்குளம் கிராமோதய சபையை திருக்கேதீஸ்வம் கிராமோதய சபை என்று பெயர் மாற்றி அதன் முதல் தலைவராகவும், உறுப்பினராகவும் இருந்து பணியாற்றினார். திருக்கேதீஸ்வரம் கிராம அபிவிருத்திச் சங்கம், கிராம முன்னேற்றச் சங்கம், நலன் புரிச் சங்கம் போன்ற பல சங்கங்களின் தலைவராக இருந்து சமூக சேவை ஆற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 139-140