ஆளுமை:முருகேசு, சுவாமிநாதர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:14, 21 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முருகேசு, ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகேசு, சுவாமிநாதர்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுவாமிநாதர் முருகேசு நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் யாழ் இந்துக் கல்லூரியில் தமது கல்வியை பெற்றவர்.

உடற்பயிற்சி போதனா ஆசிரியராக பல ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலும் நெடுந்தீவிலும் கடமையாற்றிய இவரின் சேவைக்காலத்தில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். அத்தோடு இவர் யாழ்மாவட்டப் பாடசாலைகளுடனும் தீவுப்பகுதி பாடசாலை மாணவர்களுடனும் சினேகப்பூர்வமான போட்டிகளிலும் நேரடி போட்டிகளிலும் மாணவர்களை விளையாடச் செய்து பல வெற்றிகளையும் மாணவர்கள் பெறுவதற்கு காரணமாகவிருந்தார்.

இவர் நெடுந்தீவு மக்களின் பிரயாண சேவைகள் தடைப்பட்டிருக்கும் காலங்களிலெல்லாம் தமது சொந்த மோட்டார் படகைப் சேவையிலீடுபடுத்தி மக்களின் பிரயாண கஷ்டத்தை போக்க உதவினார். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடதக்கது. பி.ரி மாஸ்டர் என மக்களால் இவர் அன்புடன் அழைக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 155-156