ஆளுமை:மாரிமுத்து, சித்திவினாயகம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:54, 20 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சித்திவினா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சித்திவினாயகம், மாரிமுத்து
தந்தை சித்திவினாயகம்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாரிமுத்து சித்திவினாயகம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் எழுத்தாளர், கவிஞர் மற்றும் கலை இலக்கிய கட்டுரையாளர் என்ற பல பரிமாணங்களை உடையவர். சித்திவினாயகம், ஈழம்ராஜி, சித்தி, ரமோனா போன்ற புனைப்பெயர்களைக் கொண்டே இவர் எழுத்துலகில் வலம் வருகிறார். கிளிநொச்சி மாவட்டத்திலேயே இவர் ஆரம்ப மற்றும் உயர்கல்வியைக் கற்றுக்கொண்டார், மேலும் கூட்டுறவுக் கல்லூரியின் கற்கை நெறியில் தேர்ந்து இவர் கணக்கியற் பதிவாளரானார். பின் கொழும்பில் கணக்கியற் பட்டப்படிப்பை தொடர முடியாமல் நாட்டுப் பிரச்சினையின் காரணமாக வெளிநாட்டிற்கு சென்றார்.

ஆரம்பகாலக் கவிஞர்களில் ஒருவராகக் கணிப்பிடப்படும் இவரின் கவிதைகள் "மரணத்துள் வாழ்வோம்" கவிதைத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இவர் புலம் பெயர் நாடுகளில் பல புனை பெயர்களில் எழுதினார். ஜேர்மனியில் இளம் அருவி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து 1984ல் அதனை வெளியீடு செய்தார். அங்கிருந்த காலத்தில் "தீ" என்னும் கவிதைதொகுப்பு இவரால் வெளிக்கொணரப்பட்டது. இவரின் சில கவிதைகள் மாற்று மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பிறகு இவர் கனடாவிற்குப் இடம்பெயர்ந்து வாழ்ந்தார். அங்கு தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வெளியீடு செய்யப்பட்ட "அரும்பு" சிறுகதைத் தொகுதியில் இவரின் "குறி" சிறுகதை பலராலும் விமர்சிக்கப்பட்டது. கவியரங்குகளின் தலைமைக் கவியாகிப் பயன் பாடுமிக்க கவிதையரங்குகளை நடத்தினார். பத்திரிகையில், தமது பதினெட்டாவது வயதில் எழுதத் தொடங்கிய சித்தி அவர்கள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்னும் இவரின் கவிதைதொகுப்பு ஒன்று அண்மைமைக் காலத்தில் சென்னையில் வெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 142


வெளி இணைப்புக்கள்