ஆளுமை:கைலாயநாதன், அம்பலவாணர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கைலாயநாதன், அம்பலவாணர்
தந்தை அம்பலவாணர்
பிறப்பு 1942.08.14
இறப்பு 1976.04.05
ஊர் மண்டைதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பலவாணர் கைலாயநாதன் (புனைபெயர்- அங்கையன், அங்கையன் கைலாயநாதன்) அவர்கள் மண்டைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சிறந்த எழுத்தாளர். கலைப்பட்டதாரியான இவர் கற்கின்ற காலத்திலேயே எழுத்துலகில் பிரவேசித்து நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி, நாடகம் போன்ற பல துறைகளிலும் இவர் கால்பதித்துள்ளார்.

சிறிதுகாலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும், வானொலி மஞ்சரி சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். அத்தோடு கடற்காற்று, செந்தணல், வானம் பாடியும் சிட்டுக் குருவியும், அங்கையன் கதைகள், வைகறை நிலவு போன்ற பல நூல்களையும், மணிக்குரல் ஒலித்தது என்ற புகழ் பெற்ற பாடல் உட்பட 9 மெல்லிசைப் பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 24


வெளி இணைப்புக்கள்