ஆளுமை:சிவகுமாரன், மு. க. சு.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:06, 13 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவகுமாரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமாரன், மு. க. சு.
பிறப்பு
ஊர் குருமசிட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மு. க. சு. சிவகுமாரன் அவர்கள் யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது பதினோராவது வயதிலேயே குரும்பசிட்டி சன்மார்க்க இளைஞர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். மகாஜனக்கல்லூரியின் பழைய மாணவர். சன்மார்க்க தீபம் என்ற கையெழுத்துப் பத்திரிகையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எழுதி வெளியிட்டவர். இவர் தற்போது ஜேர்மனயில் வாழும் வேளையிலும் வெற்றிமணி வெளியீடாக பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் கண்ணா, மாதவி, நிலாமகன் ஆகிய புனைபெயர்களில் 'புதிய வடிவங்கள்', இடைவெளி என் காதல் கிராமத்தின் சாரளம் அது என்பது இதுவா? , 'தமிழே காதல்' ஆகிய புத்தங்களை எழுதி வெளியிட்டிருக்கின்றார். இவரதது திறமைகளை கெளரவிக்குமுகமாக 1999ல் கனடா எழுத்தாளர் இணையம் 'ஓவியக் கலைவேள்' என்னும் பட்டத்தையும், 2000ஆம் ஆண்டில் கனடா உதயன் பத்திரிகை சார்பாக 'பல்கலைச் செல்வர்' என்னும் பட்டத்தையும், 2002ல் கொழும்பு ஆன்மீகப் பேரவை 'கலைஞானமணி' என்னும் பட்டத்தையும், அதே ஆண்டில் கவிஞர் கந்தவனம் அவர்களால் 'வியன் கலை வித்தகன்' என்னும் பட்டத்தையும், அமெரிக்கப் பல்கலைக் கழகத்தால் 'கலாநிதி' பட்டமும், 2003ல் கலைவிளக்கு சஞ்சிகை 'தூரிகைச் சித்தர்' என்னும் பட்டத்தினையும் அதே ஆண்டில் கனடா வரசித்தி விநாயகர் ஆலயத்தால் 'காலாபூசணம்' விருதும் இவரது திறமைக்கு கிடைத்த வெற்றி மாலைகளாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 583-585

வெளி இணைப்பு