ஆளுமை:கந்தையா, அம்பலவாணர்
பெயர் | கந்தையா வேலுப்பிள்ளை அம்பலவாணர் |
தந்தை | வேலுப்பிள்ளை அம்பலவாணர் |
தாய் | இராசம்மா |
பிறப்பு | |
இறப்பு | 1963.06. |
ஊர் | வேலணை |
வகை | அரசியற்துறைப் பெரியவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வீ.ஏ.கந்தையா வேலணை வங்களாவடியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பை மேற்கொண்டு கணிதத்தை சிறப்புப் பாடமாக எடுத்து முதற்தரத்தில் சித்தி எய்தினார். மேலும் சட்ட நுணுக்கங்களையும் கற்றரிந்து சட்டத்துறையிலும் வெகுவிரைவில் புகழீட்டி தமிழர்களுக்கு மட்டுமன்றி தென்னிலங்கை மக்களுக்கும் மிகவும் வசதி படைத்த இந்திய வர்த்தகருக்கும் சட்ட ஆலோசகராக விளங்கி பெரும் புகழ் பெற்றார். புங்குடுதீவில் சிலப்பதிகார விழா, வேலணையில் திருமுறை மகாநாடு போன்றனவற்றை நடாத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளின் பேரன்புக்கு உரியவராகவும் விளங்கினார். மேலும் இவர் பல சத்தியாக்கிரக போராட்டங்களிலும் பலரால் தாக்கப்பட்டும் தொடர்ந்தும் துணிவுடன் செயற்பட்டார். தீவுப் பகுதி மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைத்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 481-491