ஆளுமை:கணபதிப்பிள்ளை, முருகேசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிப்பிள்ளை முருகேசு
தந்தை முருகேசு
தாய் சின்னத்தங்கம்
பிறப்பு 1923
இறப்பு 1974
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசு கணபதிப்பிள்ளை வேலணை மண்கும்பானை பிறப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு 14வயதானபோது தந்தை இறந்து விட்டமையால் குடும்ப பொறுப்பு இவர் மீது வந்தது. பொருளாதார சிக்கல் காரணமாக 1943இல் கொழும்பு சென்று கடை ஒன்றில் சிற்றூழியராக தொழில் புரிந்தார். பின்னர் கொக்குவிலிலிருந்து பெருந்தொகையான சுருட்டுக்களை இங்கு கொண்டு வந்து கொழும்பிலுள்ள சுருட்டு விற்பனைக் கடைகள் அனைத்திற்கும் சுருட்டு விநியோகித்து வந்தார். ஊழியர்கள் எவருமின்றி தானே தனித்து இத்தொழிலை திறம்பட நடாத்தி வந்தார். 1971இல் கொழும்பு கோட்டையிலுள்ள முதலிகே மாவத்தையில் மூத்த மகன் குகனேசனை உதவியாக சேர்த்து புதிய நிறுவனம் ஒன்றை அமைத்தார். மேலும் வேலணை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கும், மண்கும்பான் பிள்ளையார் கோவிலுக்கும் பல திருப்பணி வேலைகளுக்கு உதவிகள் புரிந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 467-469