ஆளுமை:பெருமாள் வேலாயுதர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:02, 7 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பெருமாள்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பெருமாள்
தந்தை சின்னதம்பி வேலாயுதர்
தாய் சின்னாச்சிக்கும்
பிறப்பு 1880
இறப்பு 1940
ஊர் வேலணை
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னதம்பி வேலாயுதத்தின் மகனான பெருமாள் குருஷிஷ்ய முறையிலே ஆயுள்வேத வைத்தியத்தை கற்று அதிலே புலமை பெற்ற ஒருவனாக காணப்பட்டார். அதிலும் கைநாடி பார்க்கும் முறையிலே இவர் அதிகம் பாண்டித்தியம் நிறைந்தவராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஏடுகளை ஆய்வு செய்து மூலிகைகளை தேடி எடுத்து மருந்துக்களை தயாரிப்பதிலும் கைதேர்ந்தவராக இருந்தார். நோயாளர்களின் பிணி தீர்ப்பதற்காக தென் இந்தியாவில் இருந்து வரவழைத்த வைத்திய நிபுணர் ஒருவரின் வழிகாட்டலில் ஆயுர்வேத வைத்திய உலகில் மிக உயர்ந்ததாக பேசப்படும் மாத்திரைக்கட்டு என்னும் மருந்தினை தேவையான மூலிகைகள், மருந்துக்களைப் பெற்று தனது வீட்டிலே ஏழு வகையிலே தயாரித்து புடமிட்டு வைத்திருந்து நோய் போக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 386-388