ஆளுமை:நாகராசா, கந்தையா
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:54, 6 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகராசா, ஈ.க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | நாகராசா, ஈ.கே. |
தந்தை | இளையதம்பி கந்தையா |
தாய் | பொன்னம்மா |
பிறப்பு | 1929.11.27 |
ஊர் | வேலணை |
வகை | கல்விமான் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஈ.கே. நாகராசா (1929 நவம்பர், 27) வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் கரம்பன் சண்முகநாதன் வித்தியாலயம், காரைநகர் வார்தா பாடசாலை, அளுத்கம சாஹிராக் கல்லூரி போன்ற பல பாடசாலைகளில் 30வருட காலம் ஆசிரியராக பணி புரிந்துள்ளார். இந்தியாவில் அன்றும் இன்றும் மிகவும் பிரசித்திபெற்ற சென்னை மாநிலக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பினை ஆரம்பித்து பீ.ஏ பட்டத்தினை பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது. அத்துடன் இவர் ஆசிரியராக கடமையாற்றிய காலங்களில் புவியியல் பாடத்தில் பயிலும் மாணவர்கள் 90% சதவிதத்துக்கும் மேல் சித்தியடைவதும் வழக்கமாகும். இவர் கிழக்கு கலைமகள் சேவா சங்கத்தில் தனாதிகாரியாகவும், இந்து சமய விருத்தி சங்க செயலாளராகவும் கடமையாற்றி பல சமூக சேவைகளையும் செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 348-355