ஆளுமை:கார்த்திகேசு, ஐயம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கார்த்திகேசு ஐயம்பிள்ளை
தந்தை நாகநாதன் ஐயம்பிள்ளை
தாய் வள்ளியம்மை
பிறப்பு 1907
இறப்பு 1987.08.11
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஐயம்பிள்ளை கார்த்திகேசு 1907 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, கரம்பொன் சண்முகநாதன் வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். ஆசிரியப் பணியுடன் கஷ்ரப்பிரதேசங்களில் வைத்தியப்பணியையும் ஆற்றியுள்ளார். இவர் வேலணை மண்ணில் கல்வி கற்பதற்காக சிறார்கள் படும் துன்பத்தை கண்டு துறையூரில் தனது சொந்தக் காணியை அர்ப்பணித்து பாடசாலையை அமைத்து ஐயனார் பாடசாலை என பெயர் சூட்டினார். மேலும் துறையூரில் சனசமூக நிலையத்தின் போஷகராக இருந்து இலவச நூல்களையும் பத்திரிகைகளையும் கொடுத்து உதவியதோடு மேலும் பல சமூக சேவைகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 298-300