நிறுவனம்:யாழ்/ சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:53, 27 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Thapiththa பயனரால் நிறுவனம்:சுதுமலை அம்மன் கோவில், [[நிறுவனம்:யாழ்/ சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் சுதுமலை
முகவரி சுதுமலை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சுதுமலை என்ற ஊரில் உள்ள புராதன அம்பாள் ஆலயமாகும். இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார். கண்ணகி சுதுமலையில் தங்கி இளைப்பாறிய இடத்தில் மக்கள் ஒரு கொட்டில் அமைத்து தங்கு சங்களை எனப்பெயரிட்டு வழிபட்டு வந்தனர். இக் கோவில் இன்று ஆலமரங்களிற்கு மத்தியில் அரசமரத்தின் கீழ் மூன்று சிலைகளை கொண்டதாக அமைந்துள்ளது. பின்னர் புவனேஸ்வரி அம்மன் கோவிலாக மாற்றப்பட்டது. கொட்டில் கோவிலாக இருந்த போது பறுவதாபத்தினி அம்மன் என அழைக்கப்பட்டது. 1775 ஆம் ஆண்டு கச்சேரியில் பறுவதா பத்தினி அம்மன் கோவில் என பதிவு செய்யப்பட்டுள்ளது. 1822ஆம் ஆண்டில் இராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் எனவும் பின்னர் மனோன்மணி அம்மன் கோவில் எனவும் அழைத்து வரப்பட்டன் இக் கோயில் 1919 ஆம் ஆண்டளவிலிருந்தே ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோவில் என அழைக்கப்பட்டு வருகின்றது. இங்கு வருடா வருடம் வைகாசி விசாக பௌர்ணமி அன்று தீர்த்தோற்சவ திருவிழா நடைபெறும்விதமாக மகோற்சவம் ஆரம்பமாகி இருபது நாட்கள் திருவிழா நடைபெறும்.