நிறுவனம்:யாழ்/ வட்டுக்கோட்டை வன்னியன்தோட்டம் சின்னக் கதிர்காமம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ வட்டுக்கோட்டை வன்னியன்தோட்டம் சின்னக் கதிர்காமம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வட்டுக்கோட்டை
முகவரி வன்னியன்தோட்டம், வட்டுக்கோட்டை மேற்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வன்னியன்தோட்டம் சின்னக் கதிர்காமம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வட்டுக்கோட்டை மேற்கில் வன்னியன் தோட்டத்தில் அமைந்துள்ளது. வட்டூர் சைவப்பெரியார் சின்னட்டியாரின் மகனான முருகுப்பிள்ளையின் மகனான வெற்றிவேல் 1915ம் ஆண்டு கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற போது கோயில் அர்ச்சகராகிய “கப்புறாளை” தங்கவேல் ஒன்றை கொடுத்தார். கதிர்காமயாத்திரை நிறைவடைந்து வட்டுகோட்டைக்கு வந்த வெற்றிவேல் உடன் பிறந்தாள் நன்னிப்பிள்ளையின் இல்லத்தில் சிறுகுடில் அமைத்து தங்கவேலைத் தாபித்து வழிபட்டு வந்தார். 1921ஆம் ஆண்டில் வெற்றிவேலரின் தந்தையின் காணியான வன்னியன்தோட்டத்திலே தங்கவேலை எழுந்தருளி வித்துப் பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டது. 1931 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 16அந் திகதி சின்னட்டியார் முருகுப்பிள்ளை தனது ஆதனத்தை பங்கீடு செய்து வெற்றிவேலருக்குரிய பகுதியை உறுதி சாசனம் வழங்கியபோது அவரது காணியில் சிறிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு தங்கவேல் பிரதிட்டை செய்யப்பட்டது. அன்று திருக்கோயிலுக்கு வன்னியன் தோட்டம் சின்னக்கதிர்காமம் என நாமஞ் சூட்டப்பட்டது.