நிறுவனம்:யாழ்/ சங்கானை மாவடி ஞானவைரவர் கோயில்
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:13, 21 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | யாழ்/ சங்கானை மாவடி ஞானவைரவர் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | சங்கானை |
முகவரி | சங்கானை தெற்கு, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மாவடி ஞானவைரவர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவப்பெருமான் எழுந்தருளியுள்ளார். முந்நூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக்கொண்ட இவ் ஆலயம் மாமரத்தின் கீழ் சூலத்தினால் வைரவர் பதிக்கப்பெற்று வழிபட்டமையால் மாவடி ஞானவைரவர் என்ற சிறப்புப்பெயர் வழங்கலாயிற்று. 1924ம் ஆண்டு ஆனிமாதம் 2ம் திகதி கோயிற்காணி தர்மசாதனம் எழுதி வைக்கப்பட்டது. ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு 1958ம் ஆண்டு ஆவணிமாதம் 27ம் திகதி திருகோணம் கூடிய சுபமூர்த்தவேளையில் மகா கும்பாவிசேகம் நடாத்தப்பட்டது.