நிறுவனம்:யாழ்/ இளவாலை ஆனைவிழுந்தான் விக்கின விநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:48, 6 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Thapiththa பயனரால் நிறுவனம்:இளவாலை ஆனை விழுந்தான் விக்னேஸ்வரர் கோவில், [[நிறுவனம்:யாழ்/ இளவாலை ஆனைவ...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ இளவாலை ஆனைவிழுந்தான் ஸ்ரீ விக்கின விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் இளவாலை
முகவரி இளவாலை வடக்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இளவாலை ஆனைவிழுந்தான் ஸ்ரீ விக்கின விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் இளவாலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவ்வாலய மூலமூர்த்தியானது காங்கேசன் துறை கஜாத்துறைப் பிள்ளையார் கோவிலில் உள்ள மூலமூர்த்தியாகிய லிங்க மூர்த்தியுடன் கொண்டு விளங்கும் ஒத்த தன்மையைக் கொண்டு இவ்வாலயம் கி.பி 6-10 ஆம் நூற்றாண்டைச் சேந்ததாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. சோழ இளவரசியாகிய மரதப்புரவீக வல்லி ஏறிச் சென்ற யானை வழியில் ஓரிடத்தில் விழுந்து வணங்கியது. அவ்விடத்தில் ஓர் விநாயகர் விக்கிரகமும் காணப்பட்டது. ஆனை விழுந்து வணங்கிய காரணத்தால் அவ்விநாயக பெருமான் “ஆனை விழுந்தான் விநாயகர்” என அழைக்கப்பட்டார். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் ஆலயம் இப்போதிருக்கும் இடத்தில் சுண்ணாம்புக் கல்லால் மடாலயம் அமைக்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டின் பின்னர் இவ்வாலயம் ஆகமவிதிப்படி அமைக்கப்பட்டது.