நிறுவனம்:யாழ்/ அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:44, 3 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Thapiththa பயனரால் நிறுவனம்:அரியாலை சித்தி விநயகர் கோவில், [[நிறுவனம்:யாழ்/ அரியாலை சித்தி விநாயகர் ...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அரியாலை சித்தி விநாயகர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அரியாலை
முகவரி அரியாலை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம் www.arineersithivinayagar.org

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அரியாலை நீர்நொச்சித்தாழ்வு என்னும் புண்ணிய பூமியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் விக்கிரகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்ததென்றும், இந்தியாவிலுள்ள தொண்டை நாட்டிலிருந்து யாழ்பாடியின் காலத்தில் அவரின் முதலமைச்சர் சேதிராயரின் வேண்டுகோளின் படி கச்சிக் கணேசையர் என்னும் பிராமணோத்தினரால் கொண்டு வரப்பட்டது என்றும் நம்பப்படுகிறது. இத்திருக்கோயில் இற்றைக்கு ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன் பெரிய பிரக்ராசிரியார் என்று கொண்டாடப்பட்ட ஸ்ரீமான் விஸ்வநாதர் காசிப்பிள்ளை அவர்களால் திரும்பவும் புதிதாகக் கட்டுவிக்கப்பட்டு ஆங்கில வருடம் 1915 இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.