நிறுவனம்:யாழ்/ அராலி வண்ணப்புரம் விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் கோயில்
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:43, 3 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | யாழ்/ அராலி வண்ணப்புரம் விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | அராலி |
முகவரி | அராலி மத்தி, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐந்து பிரிவுகளை உள்ளடக்கிய அராலிக் கிராமத்தின் மத்தியிலே ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோயாதம் என்னும் ஐந்து திருமுகங்களுடன் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களையும் புரிந்து கொண்டு ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் வீற்றிருக்கின்றார். பரிவார மூர்த்தங்கள் அவரைச் சுற்றி வர அவரவர்க்கு ஆகம ரீதியாக வகுக்கப்பட்ட இடங்களில் வீற்றிருக்கின்றனர். மேலும் இத்தேவஸ்தானம் அக்காலத்தில் வண்ணாம்புலம் சிவன்கோயில், அராலி சிவன்கோயில், அராலி விசுவநாதசுவாமி கோயில், கொட்டைக்காடு சிவன்கோயில் என பெயர் வழங்கிவந்துள்ளது. இவ் வண்ணபுரம் சிவனும், வண்ணார் பண்ணைச் சிவனும் ஒரே காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பெற்றனவென்று நம்பப்படுகிறது.