ஆளுமை:சிவபாதம், ஐயாத்துரை.
பெயர் | சிவபாதம், ஐ. |
பிறப்பு | 1940 |
ஊர் | அளவெட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அளவெட்டிக் கிராமத்தில் மு.ஐயாத்துரை தம்பதிகளுக்கு மகனாக 1940ல் ஐ. சிவபாதம் பிறந்தார். இவர் மல்லாகம் திரு.த ஆறுமுகம் மற்றும் த. இரத்தினம் ஆகியோரிடம் மிருதங்கப் பயிற்சியை மேற்கொண்டு பின்னர் இந்தியாவில் திருவாவூர் திரு. நாகராஜனிடமும் கற்றவராவார். தனது மிருதங்க அரங்கேற்றத்தை 'இசைமணி' பொன் முத்துக்குமாரின் இசைக்கச்சேரி மூலம் 1960ம் ஆண்டில் நிறைவு செய்து தொடர்ந்து கலைவிழா, இசைவிழாக்களிலும் பிரபலமான வித்துவான்களுக்கும், நடன நிகழ்வுகழுக்கும் பக்கவாத்தியம் வாசித்த இவர் மிருதங்க இசையை விட தபேலா, உடுக்கு போன்ற வாத்தியங்களையும் கையாளும் திறமையுடையவர். இவரின் கலைச் சேவையைப் பாராட்டி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்த லிங்கம் அவர்களால் “லய வாத்தியத் திலகம்” எனும் பட்டமும், இணுவில் பண்டிதர் பஞ்சாட்சரம் அவர்களால் “பல்லியக் கலைமணி” என்ற பட்டமும் வலிகாமம் வடக்கு கலாசார பேரவையால் “கலைச்சுடர்” என்ற பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளமையும் “கலாபூஷணம்” விருதும் 2008-12-15 அன்று வழங்கிக் கௌரவிக் கப்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 574