ஆளுமை:மகேந்திரன், கந்தையா
பெயர் | மகேந்திரன், எஸ். கே. |
தந்தை | கந்தையா |
தாய் | தங்கம்மா |
பிறப்பு | 1951 |
இறப்பு | 1996 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
எஸ்.கே. மகேந்திரன் (பி.1951 - இ.1996) ஓர் எழுத்தாளரும், பேச்சாளரும், சமூக சேவையாளரும் ஆவார். இவருடைய தந்தை கந்தையா, தாய் தங்கம்மா. புங்குடுதீவைச் சேர்ந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை திருநாவுக்கரசு வித்தியாசாலை,கமலாம்பிகை கனிஸ்ட மஹா வித்தியாலயம் என்பவற்றிலும் உயர் கல்வியை வேலணை மத்திய கல்லூரியிலும் பயின்றார். தொடர்ந்து இலங்கை சட்டக் கல்லூரியிலே பயின்று சட்டத்தரணியாக வெளியேறினர். பின்வந்த காலங்களில் இந்தியாவிலே தனது எம்.ஏ. பட்டத்தினை பெற்றுக் கொண்டார். இவரது படைப்பில் 'எஸ். கே. மகேந்திரன் சிறுகதைகள்' எனும் சிறுகதைத் தொகுப்பும், 'என்று முடியும் எங்கள் போட்டிகள்' எனும் கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. இவரது புலம்பெயர் வாழ்வு கனடாவில் அமைந்தது. அங்கு கனேடிய வானொலியில் பணிபுரிந்துள்ளதோடு இவரின் ஆற்றலின் சிறப்பை கருதி இவர் ஆற்றிய அரசியல், இலக்கியம், சமயம், மொழியியல் சார்ந்த உரைகளை ஒலி நாடாவாகவும், குறுந்தட்டுக்களாகவும் வெளியீடு செய்து கெளரவித்துள்ளனர்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 450