ஆளுமை:இந்திரகுமார், க.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:08, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இந்திரகுமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | இந்திரகுமார், க. |
பிறப்பு | |
இறப்பு | 2008.12.21 |
ஊர் | இலங்கை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இந்திரகுமார், க. (இ.2008, டிசெம்பர் 21) ஓர் எழுத்தாளரும், கலைஞரும், திரைப்பட நடிகரும், மருத்துவரும் ஆவார்.உலக நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். இலண்டன் மாநகரில் தமிழ் இலக்கியப் பணியோடு மருத்துவராகச் செயலாற்றினார். தமிழ்த் தேசியத்தை நேசித்தவர். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற அறிவியல் தொடர் கட்டுரையை வீரகேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது.விண்வெளியில் வீரகாவியம் என்ற கட்டுரையைத் தொடராக தினகரனில் எழுதினார். இவர் வாடைக்காற்று என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 447-449