ஆளுமை:ஆனந்தன், செல்வகுமார்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:29, 15 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | குமார் ஆனந்தன், வி. எஸ். |
பிறப்பு | 1943 |
இறப்பு | 1984.08.06 |
ஊர் | வல்வெட்டித்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் (சுருக்கமாக குமார் ஆனந்தன்) அல்லது ஆழிக்குமரன் ஆனந்தன் (இறப்பு: 6 ஆகத்து 1984) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர். ஏழு உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.1954 ஆம் ஆண்டில் பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் மு. நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரே தடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 329