நூலகம் பேச்சு:நிதிப் பங்களிப்புக்கள்
எழுந்தமானமாகச் செய்யப்பட்ட மின்பிரதியாக்கங்களே 2008 இல் 'மின்பிரதியாக்கமும் திருத்தமும்' என்பதாகப் பெயரிடப்பட்டன. அவற்றை அவ்வாறு பெயரிட்டதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன.
1. அதன் மூலம் ஆவணப்படுத்தப்பட்ட நூல்களின் முழுமையான விபரங்கள் என்னிடம் இல்லை. மற்றைய திட்டங்களின் மூலம் ஆவணப்படுத்தப்படும் விபரங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கின்ற போதிலும் 'மின்பிரதியாக்கமும் திருத்தமும்' இன் கீழ் ஆவணப்படுத்தப்பட்ட விபரங்கள் என்னிடம் இல்லை. ஆகையால் அதனை தனிச் செயற்திட்டமாக அறிவிக்க முடியாது எனக் கருதினேன்.
2. செயற்திட்டங்கள் என்னும் போது அவை ஓரளவு பெரிதாக இருப்பது பயன் தருவதாகும். ஆரம்ப காலங்களில் செய்யப்பட்ட திட்டங்கள் சிறிதாக இருப்பினும் நூலகத்தின் மொத்த பிரதிகளுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் அவை பெரிதாக இருந்தமையால் அவற்றை தனிச் செயற்திட்டமாக அறிவிக்க முடியும். (இதன்படி கொழும்பு மின்பிரதியாக்கம்,2007 இரண்டு கட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.) ஆயினும் நூலக எண் 2000 தாண்டிய நிலையில் 200, 300 விடயங்களை தனிச் செயற்திட்டமாக அறிவிப்பது பலன்தரக்கூடிய விடயம் அல்லவென நினைக்கிறேன்.
மேற்கூறிய இரண்டு காரணங்களாலே 'மின்பிரதியாக்கமும் திருத்தமும்' என்று பெயரிடப்பட்டது.
மேலும், மயூரன் தற்போது ஒன்றிணைக்கும் இரண்டு திட்டங்களான திருக்கோணமலை மின்பிரதியாக்கம்,2008 மற்றும் மல்லிகைத் திட்டம் போன்றவற்றை ஒரு திட்டத்தின் இரு பகுதிகளாக இணைப்பது நல்லது என்பது எனது எண்ணம். மல்லிகை மின்பிரதியாக்கத்தின் மூலம் அண்ணளவக 4000 பக்கங்களே ஆவணப்படுத்தப்படும். முழுமைப்படுத்தல் என்ற அளவில் (qualitative) அவை முக்கியம் என்ற போதிலும், ஆவணப்படுத்தலின் அளவுடன் (quantitative) ஒப்பிடும் போது அவை முக்கியம் குறைந்தவை ஆகின்றன. இதனை விட மூனாவது விடயம் நூலகத்தின் மொத்தப் பிரதிகள்ன் எண்ணிக்கை சார்ந்தது.
Shaseevan 05:33, 23 அக்டோபர் 2008 (UTC)
நூலகத்தின் செயற்றிட்டங்கள் முடிந்த அளவு பெரியவையாக இருப்பது எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பிலும் முக்கியமானது என்பது உண்மை. ஒரு மின்னூலாக்கமென்றாலும் முக்கியமே என்றாலும் செயற்றிட்டங்கள் எனப் பொறுப்பெடுக்கப்படுபவை சிறியவையாக இருத்தலைத் தவிர்க்க வேண்டும்.
எழுந்தமானதாக இருப்பினும் அதனை ஒருங்கிணைப்பதற்கான உழைப்பு, அதற்கு நூலக நிதியிலிருந்தான ஒதுக்கீடு, மூலப் பிரதிகளை வழங்கிய விபரம் போன்றவற்றை ஆவணப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. ஆயினும் தனிச் செயற்றிட்டமாகக் காட்டுவதில் எனக்கும் தயக்கங்கள் உள்ளன.
மல்லிகை மின்பிரதியாக்கம் ஒருவிதத்தில் இதழகச் செயற்றிட்டத்தின் சில பணிகளை நிறைவு செய்கிறது. ஆனால் அதனை இதழகத்தின் கீழ் ஒருங்கிணைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது. மல்லிகை மின்னூலாக்கம் முழுமையடைகையில் அதனை அறிக்கையிடுவது பயனுள்ளதாயிருக்கும். அதேபோல இதழகத்தின் கீழ் அது தொடர்ச்சியாக ஆவணப்படுத்துவதற்கான ஒழுங்குகள் அறிக்கையிடப்படுவதும் பயனுள்ளதாக இருக்கும்.
அதே வேளை மல்லிகை அனைத்து இதழ்களையும் ஆவணப்படுத்துவதென்பது இந்த ஆண்டின் கீழ் முழுமையடையும் என்பது சாத்தியமாகாமல் போகலாம். நான்கைந்து இதழ்கள் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் ஆவணப்படுத்தப்பட்டுத்தான் முழுமை ஏற்படுமெனின் அப்பொழுதுதான் மல்லிகை மின்பிரதியாக்கமும், இதழகத்தின் ஒரு பகுதி வேலையும் முழுமையாகும். ஆனால் நூலகத் திட்டத்தின் அறிக்கையிடலில் இவற்றை முறையாகச் சேர்ப்பது சாத்தியமல்ல.
இந்த வகையில் qualitative, quantitative அம்சங்களைத் தனித்தனியாக அணுகுவது நல்ல தீர்வாக இருக்கலாம் என்று எனக்குப் படுகிறது. இதனைக் கருத்தில் எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
உண்மையில் இப்போதுள்ள நிதி அறிக்கை கூட பொருத்தமற்றதே. நிதி வருமதிகள் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டாலும் செலவு விபரங்கள் ஒவ்வொரு நிதியாண்டுக்குமாகவே (மார்ச் 31 வரை) தயாரிக்கப்பட வேண்டும். அவ்வாறே நூலகத்தின் அறிக்கையிடலும் அமைவது சரியானது. ஒவ்வொரு நிதியாண்டுக்குமான நிதிப் பயன்பாடு அவ்வவ் ஆண்டுகளுக்கானவையாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் நூலகத்தின் செயற்றிட்டங்களை ஒழுங்கமைப்பது சரியெனப் படுகிறது. இதழகம் குறிப்பிட்ட இதழ்களை முழுமைப்படுத்தி அவற்றின் புதிய எண்களை உடனுக்குடன் வெளியிட உள்ளது; மல்லிகைத் திட்டம் மல்லிகையை முழுமையாக்க உள்ளது; முகப்புச் செயற்றிட்டம் நூலக முகப்பில் தொடர்ச்சியாக புதிய வெளியீடுகளைக் காட்சிப்படுத்துகிறது. இவையெல்லாமே qualitative இன் கீழ் வருபவையே. அவற்றின் செயற்பாடு, முழுமை தொடர்பில் அறிக்கையிடுவது அவசியமே.
ஆனால் நூலகத்தின் செயற்றிட்டங்களின் கீழ் இவற்றை உப பிரிவுகளாகக் காட்டலாம் என்றே படுகிறது.
அவ்வகையில் திருக்கோணமலை மின்னூலாக்கம், மல்லிகைத் திட்டம் ஆகியவற்றின் கீழான மின்னூலாக்கத்தை ஒரு செயற்றிட்டமாகவும் முகப்புச் செயற்றிட்டம், இதழகம், எழுந்தமான மின்னூலாக்கம் ஆகியவை மூலம் மின்னூலாக்கப்பட்டவற்றை இன்னொரு செயற்றிட்டமாகவும் ஒருங்கிணைக்கலாம். இந்த ஒருங்கிணைப்பு quantitative சார்ந்த்து மட்டுமே. 2009 மார்ச் 31 உடனோ அதற்கு முன்னரோ இவை நிறைவடையும். அதன்பின்னரான செயற்பாடுகள் புதிய செயற்றிட்டங்களாக இருக்கும்.
அதே வேளை qualitative சார்ந்து ஒவ்வொரு முழுமையிலும் அறிக்கையிடுவதும் தேவையானதே. அந்த அறிக்கையிடல் நிதியாண்டுகள் சார்ந்து இல்லாமல் அவற்றின் செயற்பாடு சார்ந்து அமையும். அவ்வகையில் மல்லிகைத் திட்டமோ, இதழகமோ எடுத்துக் கொண்ட பணிகள் முழ்மையடைகையில் (அது இரு மாதங்களோ இரு ஆண்டுகளோ) அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க முடியும்.
நன்றி.
கோபி 00:48, 24 அக்டோபர் 2008 (UTC)