பேச்சு:நாட்டாரியல் ஆய்வு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:32, 7 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== மேற்படி அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

மேற்படி அமைச்சின் 2000ம் ஆண்டுக்கான இலக்கிய விழாவில் நாட்டாரியல் தொடர்பான கருத்தரங்கு ஒன்றும் இடம்பெற்றது. அதில் 12 அறிஞர்களின் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவற்றில் தேர்ந்த ஏழு கட்டுரைகளின் நூல்வடிவம். பின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப் புரிந்து கொள்ளுதல் (சி.மௌனகுரு), முல்லை மாவட்ட நாட்டார் இலக்கியம் (முல்லைமணி), நாட்டார் இலக்கியப் பண்புகளும் வடக்கில் அதன் செல்வாக்கும் (ந.அனந்தராஜ்), மட்டக்களப்புப் பிரதேச எண்ணெய்ச் சிந்து ஒரு பன்முக நோக்கு (செ.யோகராசா), தமிழ்மொழியின் கட்டமைப்புப் பண்பும் இலக்கியத்தில் அதன் செல்வாக்கும் (அ.சண்முகதாஸ்), மட்டக்களப்பில் மறைந்துவரும் கொம்பு விளையாட்டு, (க.மகேஸ்வரலிங்கம்), ஈழத்து நாட்டார் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (இரா.வை.கனகரத்தினம்), ஆகிய கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.


பதிப்பு விபரம்
நாட்டாரியல் ஆய்வு: ஆய்வரங்கக் கட்டுரைகள் 2000. திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வட-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்). v + 178 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21 * 14.5 சமீ.


-நூல் தேட்டம் (1236)