பேச்சு:கல்வி நிறுவன நூலகங்கள்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:13, 7 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== ஆரம்பப் பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

ஆரம்பப் பாடசாலைகள், கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்களான தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பல்வேறு ஆய்வகங்கள் ஆகியவற்றில் இயங்கும் நூலகங்களின் நூற்சேகரிப்பு, நூலகங்களின் பயன்பாடு, நூலக சேவைப் பகுதிகள் முதலியன விபரிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள், அவற்றை நிவர்த்தி செய்ய நூலகர் கையாளக்கூடிய வழிமுறைகள் என்பனவும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன.


பதிப்பு விபரம்
கல்வி நிறுவன நூலகங்கள். விமலாம்பிகை பாலசுந்தரம். ஆனைக்கோட்டை: அயோத்தி நூலக சேவைகள், 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: ஆர். எஸ். அச்சகம்) 78 பக்கம். விலை: ரூபா 20. அளவு: 20x14 சமீ.