பேச்சு:ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:05, 6 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== ஈழத்துத் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

ஈழத்துத் தமிழ் இலக்கியப்பரப்பு என்னும் இயலிலே இலக்கிய வரலாற்றறிஞர்கள் தமிழ் இலக்கியப்பரப்பினை வகுத்த முறையை விளக்கி, அரசியலடிப்படையிலே அப்பாகுபாடு அமையவேண்டியுள்ளதை உணர்த்தியுள்ள ஆசிரியர், ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பை நான்காக வகுத்து ஒவ்வொரு பிரிவின் இயல்களையும் விரிவாக விளக்கியுள்ளார். காவியங்கள், புராணங்கள் என்னும் இயலில் அவ்வகையில் அடங்கக் கூடிய ஈழத்து நூல்களைப் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார். ஒவ்வொரு நூலையும் பற்றி எழுதும் போது நூலாசிரியர் வரலாறு, நூலின் செய்திகள், நூலாசிரியரின் ஏனைய படைப்புக்கள் என்ற முறையினை ஆசிரியர் பின்பற்றியிருக்கின்றார்.


பதிப்பு விபரம்
ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு. எப்.எக்ஸ்.சி.நடராசா. கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி, 2வது பதிப்பு, செப்டெம்பர் 2001, 1வது பதிப்பு, ஜுலை 1970. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி) xii + 108 பக்கம், விலை: ரூபா 200. அளவு: 21.5 * 14.5 சமீ. (ISBN சாதாரண பதிப்பு 955 9429 086, விசேட பதிப்பு 955 9429 14 0)