பயனர் பேச்சு:கோபி
பொருளடக்கம்
வெளியிணைப்புக்கள்
===html===, ===pdf=== என்று தனித்தனி தலைப்புகளுக்குக் கீழ் புத்தகங்களைத் தொடுத்தால் என்ன? --மு.மயூரன் 08:06, 28 ஆகஸ்ட் 2007 (MDT)
- பயனர் பக்கத்தில் பதிலளித்துள்ளேன். --கோபி 22:21, 28 ஆகஸ்ட் 2007 (MDT)
நூல் வார்ப்புரு
கோபி, நூல் வார்ப்புருவில் நிரப்பப்படும் விஷயங்கள் நேரடியாக பகுப்புக்களாக ஆகுமாறு ஏதும் செய்ய முடியாதா?
அதாவது மொழி, நூல் வகை எல்லாம் அங்கே போடுகிறோமல்லவா? திரும்ப மீளவும் பகுப்புப்போடாமல், அதை நிரப்பும் போதே இயல்பாக பகுப்புக்களும் உருவாகுமாறு செய்ய முடியாதா? அத்தோடு அதன் மீது சொடுக்கும் போது பகுப்பு பக்கத்துக்கு போகும் படியும்.
நூல்கவை கவிதை என்று இருக்கும். அந்த கவிதை மீது சொடுக்கினால் அது கவிதைப் பகுப்புக்கு கொண்டு செல்லும். அப்பிடி. --மு.மயூரன் 01:23, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
- உடனடியாக அதற்கான வழி தெரியவில்லை. ஆனால் நூல் வார்ப்புருவில் இடும் வகைகளுக்கு மேலதிகமாகவும் வகைகள் இட வேண்டி வரும்... --கோபி 01:28, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
- அப்படி ஒரு வசதி செய்யப்பட்டால் அது பிரச்சினை இல்லைய என்றே கேட்கவந்தேன். ம்ம்.. மேலதிகமாக தேவைப்படும் பகுப்புக்களை தனியாக இடலாம்.
நூல் வார்ப்புரு
கோபி, ஒன்றுக்கு மேற்பட்ட நூலாசிரியர்களைக் கையாளக்கூடியதாக, நூல் வார்ப்புரு இல்லை என்று நினைக்கிறேன். அது சரிப்படுத்தப்படவேண்டும், நூலாசிரியர்களை ஒன்றுக்குக்கு கீழ் ஒன்றாக பட்டியலிடத்தக்கதாக வார்ப்புரு மாற்றப்பட வேண்டும். --மு.மயூரன் 05:51, 30 ஆகஸ்ட் 2007 (MDT)
- நான் அனுப்பிய மின்னஞ்சலில் தேவையான மற்றங்களைச் செய்து இற்றைப்படுத்தி திருப்பி அனுப்பிவிடவும். அது சில நண்பர்களுக்கு அனுப்பப்படவேண்டியது. முடியுமானவரை அதனை இலகுபடுத்தவும். --மு.மயூரன் 05:52, 30 ஆகஸ்ட் 2007 (MDT)
ஆம். மாற்றப்படல் வேண்டும். எப்படியென்று உடனடியாகத் தெரியவில்லை... மீடியாவிக்கி நுட்பப் பரிச்சயமுள்ளவர்களின் உதவி இருந்தால் இவை எல்லாம் இலகு. கோபி 05:55, 30 ஆகஸ்ட் 2007 (MDT)
அட்டைப்படம்
பொதுவான அட்டைப்படம் ஒன்று செய்துகொண்டிருக்கிறன். இப்ப சாப்பிடப்போறன். சாப்பிட்டிட்டு வந்து அத ஏத்தி விடுறன். இப்போதைக்கு ஏதாவதொரு file name ஓட படங்களை போடு. .png extention. அந்த file name அ எனக்கு சொன்னால் சரி. அதே பேரில கோப்பை ஏத்தி விடுறன். படத்துக்காக காத்திருக்கத்தேவையில்லை. --மு.மயூரன் 02:36, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
அட்டைப்படம் இல்லாத நூற்கள்
அட்டைப்படம் இல்லாத நூற்கள் எவை என இந்தப்பக்கத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் ;-) --மு.மயூரன் 04:44, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
பெயர்வெளி
பெயர் வெளிகள் என்னென்ன என்பதை தெளிவாக வரையறுத்துக்கொள்வது பங்களிப்புக்கு வசதியாக இருக்கும். பொதுவான பெயர் வெளிகள் நூல்களுக்கு மட்டும் தானா? எனக்கு இதில் தெளிவில்லை. நூலகம் என்ற பெயர்வெளி புரிகிறது. --மு.மயூரன் 03:45, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
கலந்துரையாடல்
கலந்துரையாடல் பக்கம் என்னாச்சு? --மு.மயூரன் 03:45, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
முதன்மைப் பெயர்வெளியை நூல்களுக்கும் சஞ்சிகைகளுக்கும் மட்டும் ஒதுக்கிவிட்டு ஏனையவை எல்லாவற்றையும் வேறு பெயர்வெளிகளில் வைத்திருப்பது குழப்பத்தை குறைக்கும் என்று நினைக்கிறேன்.
அறிமுகம்
பார்க்க --மு.மயூரன் 04:03, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
கோபி விக்கிசார் தொழில்நுட்பங்களில் எனக்கு போதுமான அறிவு இல்லை ஆகவே அது சம்பந்தமாக என்னால் உதவ முடியாது தேவையெனில் திருத்தங்களைச் சுட்டிக் காட்டுகிறேன். நிதியுதவி பற்றிய பக்கத்தில் நிதியுதவி எவ்வாறான விதங்களில் பயன்படும் என்பதை கொஞ்சம் விளக்கமாக எழுதலாம். நிலுவையில் இருக்கும் நூல்களை வலையேற்ற அவசரத் தேவையான நிதி எவ்வளவு என்று தெரிவித்தால் பங்களிப்போர் முன்வரலாம்--Eelanathan 23:35, 1 செப்டெம்பர் 2007 (MDT)
வணக்கம்
வணக்கம் கோபி. இங்கே நான் எவ்வாறான பங்களிப்புகளை வழங்கலாம்?. நேரம் கிடைக்காததுதான் இப்போதய பிரச்சனை. இயலுமான வரை பங்களிக்க முயல்கின்றேன். --மயூரேசன் 05:17, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
புதிய நூல் வார்ப்புரு
கோபி, பழைய வார்ப்புருவில் ஏராளமான மாற்றங்களைச்செய்து சீர்படுத்தப்பட்ட புதிய வார்ப்புருவினை வடிவமைத்துள்ளேன். பார்க்க வார்ப்புரு:நூல் புதிய வார்ப்புருவின்படி தொகுக்கப்பட்ட நூல் இன்னொன்றைப் பற்றி இந்த வார்ப்புருவைப்பொறுத்தவரை படிவத்தைப் பூர்த்தி செய்தாலே போதும், ஏனைய சகல பகுப்புக்களையும், தொடுப்புக்களையும் வார்ப்புருவே செய்துதரும்.
- மயூரன், பகுப்புக்களைத் தானாக இடுவதற்கு இதே வார்ப்புருவைத் தான் முதலில் பயன்படுத்தினேன். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், ஆண்டுகளை இதனால் கையாள முடியாது. மேலும் மின்னூற் தொடுப்புக்கள் இடதுபக்கம் அமைவது நல்லது ஏனெனில் மின்னூல் வாசிக்க வரும் ஒருவருக்கு முதலில் தெரிவதாகவும் இலகுவில் புலப்படுவதாகவும் பக்கம் அமைய வேண்டும். முதற்பக்க மாற்றம் நன்று. கோபி 20:48, 31 ஆகஸ்ட் 2007 (MDT)
- ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வரும்போது "ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்" என்று குறித்துவிட்டு நாம் மேலதிகமாக ஒவ்வொரு ஆசிரியர் பெயரிலும் பகுப்பிட வேண்டும். இடது பக்கத்தில் வரவேண்டியதையும் தன்னியக்கமாக்கி விடலாம். (வார்ப்புருவே செய்யும்படி) என்னைப்பொறுத்தவரையில் நூலை சேர்ப்பது முடியுமானவரை இலகுவாக்கப்பட வேண்டும். அவ்வளவே.--மு.மயூரன் 23:09, 31 ஆகஸ்ட் 2007 (MDT)
தன்னியக்கமாக எல்லாவற்றையும் செய்ய வேண்டிய கட்டாயமில்லை. மொத்தமாக உருவாக்க வேண்டிய கட்டுரைகள் 700+ மட்டும்தான். பகுப்புக்கள் சரியாக அமைவதும் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதுமே முக்கிமானது. மீடியாவிக்கிப் பரிச்சயம் இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களைத் தன்னியக்கமாக சேர்க்க முடியும். வார்ப்புரு மாற்றப்பட்டால் பக்கங்கள் அனைத்திலும் மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும். இல்லையேல் வருபவர்களுக்குப் பக்கங்கள் விக்கிக் குறியீடுகளாகவே தெரியும். கோபி 23:21, 31 ஆகஸ்ட் 2007 (MDT)
- சரி, இப்பொழுது எனக்கு எந்த வார்ப்புருவைப்பயன்படுத்துவது, எப்படி நூலொன்றைச்சேர்ப்பது எல்லாமே குழப்பமாக இருக்கிறது. சில நண்பர்களைக்கொண்டு இத வேலையை துரிதப்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன். நீங்கள் கடைசியாக செய்திருந்த வார்ப்புருவின் குழப்பம் காரணமாக அதையும் என்னால் செய்ய முடியாதுள்ளது. எனவே நூற்களை சேர்க்கும் பணியிலிருந்து விலகுவதைத்தவிர எனக்கு வேறு வழி இல்லை. இலகுவான வழி ஒன்று இருக்க, தலையைச்சுற்றி மூக்கைத்தொடும் வேலைகளில் என்னால் தொடர்ந்து ஈடுபட முடியாது. அது எனது இயல்புசார்ந்த பிரச்சினை. --மு.மயூரன் 02:30, 1 செப்டெம்பர் 2007 (MDT)
நீங்கள் சுட்டிக் காடுவது சரியானது; நான் மறுக்கவில்லை. ஆனால் சரியான விக்கியறிவு இன்றி இதனைச் செய்வது கூட தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுதான். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், பதிப்பகங்கள், பதிப்பு ஆண்டுகள் ஆகியவற்றை என்ன செய்வது? நான் என்ன மாற்றம் செய்தாலும் பக்க வரலாற்றில் உள்ளது. மீளமைத்துப் பார்க்கலாம். ஒரு வார்ப்புருவில் மாற்றம் செய்தால் அது பயன்படும் அனைத்துப் பக்கங்களிலும் மாற்றஞ் செய்யப்படல் வேண்டும். ஒரு பக்கத்தை மட்டும் மாற்றியமைப்பதால் பயனில்லை. விக்கி இப்பொழுது நூலக முகப்பாக உள்ளதால், வார்ப்புருவில் மாற்றஞ் செய்தால் விரைவாக அனைத்துப் பக்கங்களும் மாற்றியமைக்கப்படல் வேண்டும். அதற்கான ஆளணி இன்மையை உணர்ந்தே வார்ப்புருவை முன்னிலையாக்கினேன். மின்னூல் இணைப்பு தனியாகக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதைத் தவிர நீங்கள் செய்த மாற்றத்தில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் மாற்றம் பொருத்தமாகச் செய்யப்படல் வேண்டும் என்பதை ம்ட்டுமே சுட்டிக் காட்டினேன். நன்றி. :-) கோபி 04:22, 1 செப்டெம்பர் 2007 (MDT)
இரயாகரனின் நூல்
நான் அனுப்பிய இரயாகரனின் நூலுக்கான நூலகம் எண்ணை தந்துதவினால் நன்றாக இருக்கும். --மு.மயூரன் 09:42, 2 அக்டோபர் 2007 (MDT)
- நீங்கள் அனுப்பிய மின்னூலை இங்கே பதிவேற்றி நிலுவையிலுள்ள பணிகள் என்ற பகுப்பில் சேர்த்து விடுங்கள். பின்னர் இலக்கத்தை வழங்கி விடுகிறேன். நன்றி. கோபி 12:35, 9 அக்டோபர் 2007 (MDT)
எனது கருத்து
கோபி, வலைத்தளம் மிகவும் அருமையாக உள்ளது. எனினும் ஒரு சிறு குறை. கோப்புகளுக்கான PDF இணைப்பை தரும் போது கோப்பின் அளவையும் தந்தால் உதவிகரமாக இருக்கும். ஏனெனில் நான் பார்த்த சில புத்தகங்கள் மிகவும் பெரிதாக இருந்தன, என்னுடைய உலாவி Hang ஆகி விட்டது(என்னுடயது மிகவும் வேகக்குறைவான இணைய இணைப்பு). எனவே கோப்பின் அளவை குறிப்பிட்டால் உடனக்குடன் படிக்கவேண்டுமா இல்லை பதிவிறக்கம் செய்து படிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யலாம். மிகவும் அதிகமான அளவுள்ள கோப்புகளை உடனுக்குடன் குறைவான வேக இணைப்பின் படிக்க முற்பட்டால உலாவி ஸ்தம்பித்துவிடும். Vinodh.vinodh 22:33, 24 டிசம்பர் 2007 (MST)
- நன்றி வினோத். நீங்கள் சுட்டிக்காட்டியபடி PDF கோப்புகளுக்கான இணைப்பில் கோப்பு அளவையும் குறிப்பிடுவது இலங்கையிலுள்ளோருக்கும் பயனுள்ளது. ஆனால் பட்டியலில் இல்லாமல் குறித்த நூல்கள்/இத்ழ்களுக்கான பக்கங்களில் கோப்பு அளவுகளைக் குறிப்பது அழகாக இருக்குமென்று படுகிறது. கோபி 01:48, 25 டிசம்பர் 2007 (MST)