நூலகம் பேச்சு:மின்பிரதிச் செயற்றிட்டம், கொழும்பு 2008

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இனப்பிரச்சனை உச்சமடைந்ததன் பிற்பாடு 80 களிலேயே ஈழத்தமிழரின் புலப்பெயர்வு ஆரம்பமாயிற்று. புலம்பெயர் இலக்கியம் என்னும் புதியதொரு இலக்கிய வகை மாதிரியின் தோற்றுவாய் 80 களிலேயே புலப்படத்தொடங்கியது. பல்வேறு நாடுகளுக்குமாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள், தாங்கள் குடியேறிய நாடுகளிலே சஞ்சிகைகளை வெளியிடத்தொடங்கினார்கள்.

90 களின் பின்னர் மாற்றுக்கருத்தாளர்களின் முக்கிய தளமாக புலம்பெயர் பிரதேசங்கள் அடையாளம் காணப்படுகின்றன. அக்காலத்தில் முக்கியமான அரசியல், இலக்கிய கருத்தாடல்களுன் பல்வேறு சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன.

புலம்பெயர் சமூகத்தின் வாழ்வுநிலையை ஆவணப்படுத்தும் நோக்கில் புலம்பெயர் பிரதேசங்களின் வெளிவந்த சஞ்சிகைகள், இத்திட்டத்தின் மூலம் நூலகத்திட்டத்தில் ஆவணப்படுத்தப்படுகின்றன. புலம்பெயர் பிரதேசங்களில் இருந்து 60 மேற்பட்ட சஞ்சிகைகள் வெளிவந்ததாக/ வெளிவருவதாகக் கூறப்படுகின்ற போதிலும் அவற்றைப் பெற்று ஆவணப்படுத்துவதில் பலவித சிக்கல்கள் காணப்படுகின்றன. சஞ்சிகைகளைப் பெற்றுக்கொள்வதென்பதே இவற்றில் மிக முக்கியமான பிரச்சனையாகக் காணப்படுகின்றது.

திட்ட ஒருங்கிணைப்பு: க. சசீவன்

கட்டம்- 1

பதமநாப ஐயர் அவர்கள் இத்திட்டத்தின் முதற்கட்டமாக 193 புலம்பெயர் சஞ்சிகைகளை அனுப்பி வைத்திருக்கிறார். அதில் சில சஞ்சிகைகள் ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன. மிகுதி 185 இற்கும் மேற்பட்ட சஞ்சிகைகளும் இத்திட்டத்தின் கட்டம்- 1 இன் கீழ் மின்பிரதியாக்கம் செய்ய ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
பூவரசு- 1, தேனீ- 1, உயிர்நிழல்- 1, அறிதுயில்- 1, வெண்ணிலவு- 1, அற்றம்- 1, தமிழர் தகவல்- 2, மற்றது- 2, உயிர்மெய்- 2, பார்வை- 3, புதுமை- 2, பெண்கள் சந்திப்பு மலர்- 3, உயிர்ப்பு- 2, சக்தி- 9, அ ஆ இ- 10, அம்மா- 12, தேடல்- 12, நாழிகை- 10, காலம்- 25, தூண்டில்- 43, சுவடுகள்- 43. போன்றவையாக மொத்தம் 185 சஞ்சிகைகளின் மின்பிரதியாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.