உதவி:வார்ப்புரு

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:51, 25 சூலை 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (உரைக்கோர்வை)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஒரு குறிப்பிட்ட உரையையோ அல்லது ஒரேமாதிரி வடிவமைக்கப்பட்ட உரையையோ பல பக்கங்களில் சுலபமாக இடுவதற்கான ஒரு குறுக்குவழியே வார்ப்புரு ஆகும். வார்ப்புருப்பக்கத்தின் பெயரை மட்டும் ஒரு பக்கத்தில் இட்டால், அது வார்ப்புரு பக்கத்தில் உள்ள உள்ளடக்கத்தை தன்னியக்கமாக அப்பக்கத்தில் சேர்த்துவிடும். வார்ப்புருவின் பெயருக்கு பதில், அவ்விடத்தில் அப்பக்கம் வார்ப்புருவில் உள்ள உள்ளடக்கத்தை விரிவாக்கம் செய்கிறது.

ஒரு குறிப்பிட்ட உரை/தகவலை அனைத்து பக்கங்களில் இட வார்ப்புருக்கள் சிறந்த வழியாகும். இதனால், மிகவும் எளிதாக தகவல்களை சேர்க்க இயலும். உரை அல்லது தகவலை மாற்றவேண்டி இருந்தால், வாப்புருவில் நேரடியாக மாற்றம் செய்தால், அது வார்ப்புரு சேர்க்கப்பட்டுள்ள அனைத்துப்பக்கங்களிலும் மாற்றப்பட்டுவிடும்.

வார்ப்புரு இயற்றுதல்

வார்ப்புருவை இயற்ற வார்ப்புரு என்னும் பெயர்வெளியில் வாப்புருவின் பெயருடன் வார்ப்புரு பக்கத்தை இயற்ற வேண்டும். தேவையான உரையை பக்கத்தில் இட்டு பக்கத்தை இயற்றவும்.

இயல்பிருப்பாக, வார்ப்புருபக்கத்தில் இடும் அனைத்து உள்ளடக்கமும், இடப்பட்ட பக்கங்களில் தன்னியக்கமாக விரிவாக்கப்படும். எனினும் கீழ்க்கண்ட உரைக்கோர்வைகள் மூலம் இதை கட்டுப்படுத்தலாம்.

உரைக்கோர்வை =

வார்ப்புரு பக்கத்தில் மட்டும் தகவல் தெரியவேண்டுமெனில் <noinclude> </noinclude> என்னும் உரைக்கோர்வைக்குள் தகவலை இட்டால், அது அந்த வார்ப்புருபக்கத்தில் மட்டும் தெரியும். வார்ப்புரு இடப்படும் பக்கத்தில் அவை வாரா.

அதேபோல, <includeonly> </includeonly> என்ற கோர்வைக்குள் உள்ளடக்கத்தை இட்டால், வார்ப்புரு பக்கத்தை தவிர்த்து வார்ப்புரு இடப்படும் பக்கங்களில் அந்த உள்ளடக்கம் காணப்படும்.

வார்ப்புரு வகைகள்

சாதாரண வார்ப்புரு

இவ்வகை வார்ப்புருக்கள் குறிப்பிட்ட உரையை அப்படியே பலவேறு பக்கங்களில் இடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உள்ளடக்கத்தை தேவைக்கேற்றாற்போல் மாற்ற இயலாது. உள்ளடக்கம் அப்படியே பிரதிபலிக்கப்படும்.

உதாரணம் காண்க: வார்ப்புரு:மாதிரி

சாதாரண வார்ப்புருவை இடுவதற்கு பக்க தொகுப்புப்பெட்டிக்குள் வேண்டிய இடத்தில் {{ }} என்ற குறிகளுக்குள் வார்ப்புரு பெயரை தந்தால் போதுமானது.

{{மாதிரி}}

Crystal Clear action run.JPG இது ஒரு மாதிரி சாதாரண வார்ப்புரு

Parameter வார்ப்புரு

இதன் மூலம் வார்ப்புருவில் Parameterகள் கொடுப்பதன் மூலம், வெளியிடப்படும் உள்ளடக்கத்தை தேவைக்கேற்றார்போல் மாற்றலாம்.

உதாரணம் காண்க: வார்ப்புரு:உ

உருவாக்கம்

இவ்வகை வார்ப்புருவில் Parameterகளை {{{1}}} எண்களைக்கொண்டோ {{{அ}}} என்ற குறிப்பிட்ட அடைப்புக்குறிக்குள் பெயர்களைக்கொண்டோ கொடுக்கவேண்டும். எண்களைக்கொண்ட Parameterகள் வார்ப்புருவை இடும்போது Pass செய்யப்படும் Parameterகளின் Orderஐ பொறுத்து எண்களுடன் தொடர்புகொள்ளப்படும். பெயருடன் கூடிய Parameterகளை Pass செய்யும் போது எந்த Orderஇல் வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.

பெயரற்ற

'''{{{1}}}''' மற்றும் ''{{{2}}}'' என்ற உள்ளடக்கத்துடன் ஒரு மாதிரி1 என்ற பெயருடன் வாப்புரு இயற்றப்பட்டுள்ளது.

பெயரற்ற Parameterகளுடன் கொடுத்தால்,

{{மாதிரி1|தடித்த|சாய்வு}} - தடித்த மற்றும் சாய்வு

என்றவாறாக வரும்.

அதே நிலையில் Orderஐ மாற்றிக்கொடுத்தால்,

{{மாதிரி1|சாய்வு|தடித்த}} - சாய்வு மற்றும் தடித்த

எனமாற்றிவருவதை காணலாம்.

பெயருள்ள

இதை பெயருடன் கூடிய Parameter கொண்ட வார்ப்புருவாக இயற்றினால், எந்த Orderஇல் வேண்டுமானாலும் Parameterகளை Pass செய்ய இயலும்.

உதாரணமாக:

'''{{{த}}}''' மற்றும் ''{{{ச}}}'' என்றவாறாக மாதிரி2 என்ற மாதிரி வார்ப்புரு உள்ளது. மேலே உள்ளப்படி,

பெயர்களுடன் Pass செய்தால்,

{{மாதிரி2|த=தடித்த|ச=சாய்வு}} - தடித்த மற்றும் சாய்வு என வரும்.

Parameter Pass செய்யப்படும் Orderஐ மாற்றினாலும் எனக்கொடுத்தால் கூட மேற்கண்டவாறே தோன்றும்

{{மாதிரி2|ச=சாய்வு|த=தடித்த}} - தடித்த மற்றும் சாய்வு

Parameterகளை மறைத்தல்

மேற்கண்ட வார்ப்புருக்களில் ஏதேனும் Parameterகள் Pass செய்யப்படவில்லை என்றால், அப்பெயர்கள் அப்படியே தோன்றும்.

(எ.டு) {{மாதிரி1}} - {{{1}}} மற்றும் {{{2}}}

இதை தவிர்க்க வார்ப்புரு இயற்றும் போதே Parameterகளின் இயல்பிருப்பு மதிப்பை கொடுத்தோமேயானால், அவை Pass செய்யப்படாத நிலையில் இயல்பிருப்பு மதிப்பு பயன்படுத்தப்படும்.

உதாரணமாக:

வார்ப்புரு:மாதிரி3இல் '''{{{த| }}}''' மற்றும் ''{{{ச|வி}}}'' என விக்கி நிரல் உள்ளது. இதில் தவுக்கான் இயல்பிருப்பு மதிப்பாக வெற்றிடமும் சவுக்கான இயல்பிருப்பு மதிப்பாக "வி"யும் உள்ளது. இரண்டுமோ அல்லது ஏதேனும் ஒன்று விடப்பட்டாலும் இயல்பிருப்பு மதிப்புகள் பயன்படுத்தப்படும்.

{{மாதிரி3}} - மற்றும் வி

{{மாதிரி3|த=தமிழ்}} - தமிழ் மற்றும் வி

{{மாதிரி3|ச=தெலுங்கு}} - மற்றும் தெலுங்கு

பெயரற்ற Parameterகளுக்கும் இவ்வாறான் இயல்பிருப்பு மதிப்பை கொடுக்க இயலும்.

இவற்றையும் காண்க

"https://noolaham.org/wiki/index.php?title=உதவி:வார்ப்புரு&oldid=10211" இருந்து மீள்விக்கப்பட்டது