இராதிகா சிற்சபையீசன்

நூலகம் இல் இருந்து
Tharsiga (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:03, 2 பெப்ரவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்={{ஆளுமை| பெயர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

{{ஆளுமை| பெயர்=

பெயர் இராதிகா சிற்சபையீசன்
பிறப்பு 1981.12.21
ஊர் யாழ்ப்பாணம்
வகை அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராதிகா சிற்சபையீசன் (1981.12.21) இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ராதிகா 5வது அகவையில் கனடாவுக்குக் குடி பெயர்ந்தார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பட்டப் படிப்பை மேற்கொண்டு, பின்னர் கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் தொடந்து கல்வி கற்று வர்த்தகவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். தொடர்ந்து குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார் ஐந்து அகவையில் கனடா வந்த ராதிகா இங்கு வழங்கப்படும் தமிழ் வகுப்புகளுக்குச் சென்றார். இவர் பேருந்து எடுத்துச் சென்று ஆர்வத்துடன் தமிழ் கற்றார். இவரது தந்தையார் கத்தோலிக்க கல்வித் திணைக்களத்துடன் இணைந்து மிசசாகாவில் முதலில் தமிழ் வகுப்புக்களைத் தொடங்கினார். இவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்டார். இராதிகா புதிய சனநாயகக் கட்சியில் 2004 ஆம் ஆண்டில் இணைந்தார். எட் புரோட்பெண்ட்டுக்கு ஆதர்வாக அவர் பரப்புரை செய்தார். அன்றில் இருந்து அக்கட்சியின் பல செயற்பாடுகளில் தீவிரமாகப் பங்குபற்றி வருகிறார். ரொரோண்டோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற நடுவண் அரசுத் தேர்தலில் ஸ்கார்பரோ ரூச் ரிவர் தொகுதியில் முதற்தடவையாக புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 18,856 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

"https://noolaham.org/wiki/index.php?title=இராதிகா_சிற்சபையீசன்&oldid=553159" இருந்து மீள்விக்கப்பட்டது