ஆளுமை:கௌரிசங்கரி

நூலகம் இல் இருந்து
Tharsiga (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:35, 8 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கௌரிசங்கரி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கௌரிசங்கரி
தந்தை சண்முகசுந்தரம்
தாய் யமுனாதேவி
பிறப்பு 1955.10.29
இறப்பு 2021.08.23
ஊர் யாழ்ப்பாணம்
வகை சட்டத்தரணி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
GOWRISANGARI.jpg

கௌரிசங்கரி, தவராஜா (1956.09.07) யாழ்ப்பாணம் அள்வெட்டியில் பிறந்த கல்வியியலாளர். இவரது தந்தை சண்முகசுந்தரம்; தாய் யமுனாதேவி. ஆரம்ப கல்வியை அருநோதயா கல்லூரியிலும், உயர்கல்வியை மகாஜனா கல்லூரியிலும் கற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட இளமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். மனிதபிமான வழக்குகளிற்கும், ஆட்கொணர்வு வழக்குகளிற்கும், பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிரான வழக்குகளிற்கும் தலைநகரில் எவ்வித பயமும் இன்றி துணிகரமாக செயற்பட்ட சட்டத்தரணி. பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் சட்ட ஆட்சியை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கை வகித்தார். சட்டப்போராளி என பெயர் பெற்றவர். கடந்த 35 ஆண்டுகளாக இடம்பெற்ற நீதிக்கான இந்தச் சட்டப்போரில் எந்த இடத்திலும் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தோற்றுப்போகவில்லை.

1984.06.14 ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவை திருமணம் செய்து கொண்டார். கொரோனா பெரும் தொற்றால் 2021.08.23 அன்று இறைவனடி சேர்ந்தார்.

குறிப்பு : மேற்படி பதிவு கௌரிசங்கரி அவர்களின் நினைவு மலர் - கௌரி நீதிக்கான குரலை அடிப்படையாகக்கொண்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கௌரிசங்கரி&oldid=544793" இருந்து மீள்விக்கப்பட்டது