ஆளுமை:தர்மராஜா, ராமசாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:41, 13 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை1| பெயர்= தர்மராஜா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தர்மராஜா
தந்தை ராமசாமி
தாய் பரமநாதன் ஆச்சிமுத்து
பிறப்பு 1946-07-06
ஊர் பருத்தித்துறை
வகை கிளிநொச்சி கல்வி வலய ஓய்வு பெற்ற ஆங்கில பாட ஆலோசகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தர்மராஜா, ராமசாமி அவர்கள் (1946-07-06 - ) பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட நாடக கலைஞர். இவரது தந்தை ராமசாமி; தாய் ஆச்சிமுத்து. ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் கோப்பாய் நாவலர் வித்தியாலயத்தில் கற்றார் பின்னர் யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் கற்றார்.

உயர்தர கல்வியின் பின்னர் இவர் ஆங்கில பாட ஆசிரியராக 1968.11.01 இல் ஆசிரிய பணியை ஆரம்பித்தார். பின்பு 1970 ஆம் ஆண்டு பங்குனி மாதம் யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். பயிற்சியின் பின்னர் 01.01.1973 இல் பதுளை ஸ்பிரிங் வொலி(spring valley) தமிழ் வித்தியாலயத்தில் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றினார். 21.01.1980 ஆம் திகதி அன்று கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்திற்கு ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றினார்.

1986 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் கிளிநொச்சி இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு இடமாற்றம் கிடைத்து ஆசிரிய சேவையை தொடர்ந்தார். பின்னர் 1988.10.01 திகதி அன்று கிளிநொச்சி மகா வித்தியாலயம் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றினார். 1990 ஆம் ஆண்டு கிளிநொச்சி கல்வி வலய ஆங்கில பாட ஆலோசகர் (I S A) பணியில் இணைந்தார். 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் TESL Diploma Trainee - NIE - மகரகமவில் இணைந்தார். 1996 ஆம் ஆண்டு ஆங்கில பாடநெறி உதவிக்கல்விப் பணிப்பாளராக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றினார். ஆடி மாதம் 06 ஆம் திகதி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

வளங்கள்

ராமசாமி தர்மராஜா கந்தசாமி முருகவேல் கிளி/வட்டக்கச்சி ம.வி வைரவிழா மலர்