ஆளுமை:மகேந்திரராசா, வைத்திலிங்கம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:58, 12 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை1| பெயர்= மகேந்திரர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | மகேந்திரராசா |
தந்தை | வைத்திலிங்கம் |
தாய் | நாகமுத்து |
பிறப்பு | 1946.5.14 |
ஊர் | கிளிநொச்சி, திருநகர் வடக்கு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகேந்திரராசா, வைத்திலிங்கம் (1946.5.14 -) கிளிநொச்சி, திருநகர் வடக்கு கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை நாகலிங்கம் வைத்திலிங்கம்; தாய் நாகமுத்து ஆவார்கள். ஆரம்ப கல்வியினை நெடுந்தீவு அமெரிக்கன் இடையூளியை பள்ளியிலும், பின்னர் இடைநிலைக்கல்வியினை நெடுந்தீவு உயர்நிலைப்பள்ளியிலும், பின் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் தரம் 7 தொடக்கும் உயர்தரம் வரை கற்ற பின்னர், மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். அங்கு மின் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். 1977ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையில் மின் பொறியியல் கண்காணிப்பாளராக கடமையாற்றினார். 2002 தை மாதம் தனது 55வது அகவையில் ஓய்வு பெற்றார். 55 வயதிற்கு பின் இவர் இலக்கியம் மீது அளவற்ற பற்று கொண்டு பல இலக்கிய நூல்கள் மற்றும் ஆய்வு நூல்களையும் வெளியிட்டு பாராட்டுக்களை பெற்றுள்ளார்.அவர் எழுதிய நூல்களாக மதுரை எரிகிறது, தமிழர் இலக்கிய இலக்கணம், தமிழியச் சான்றோர், பெய்யெனப் பெய்யும் மழை, தமிழ் எழுச்சி, உலக உயர் தனிச் செம்மொழி செந்தமிழ், தமிழர்மெய்யியல்கோட்பாடு (திருக்குறள்,ஒளவைநூல்கள்), ஒருங்கிருக்கை (யோகாசனம்) நெறி, சமயப்பன்மையியமும் ஆகஈ (ஆன்மீ)கமும், அகனின் விழிப்புக் கதைகள், கிறீத்தவர்களின் தமிழ்க்கொடை, தமிழியச் சான்றோர் பகுதி 2,3, இலங்கை குமரித் தமிழ்ப்பணி மன்றம் 5 ஆம் ஆண்டு நிறைவு மலர் என்பன ஆகும். இவர் தனது பெயரினை தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என கருதி தனது பெயரை குமரிவேந்தன் என்று மாற்றினார். அது மட்டுமன்றி பல திருமணங்களை தலைமயேற்று தமிழ்திருமணம் மற்றும், திருக்குறள் திருமணங்கள் நடாத்தினார். இவர் தமிழ் மேல் கொண்ட பற்றின்காரணமாக கரைச்சி பண்பாட்டு பேரவை மற்றும் கரைச்சி பிரதேச செயலகத்தினால் 2015 ம் ஆண்டு கரைஎழில் விருதும், கிளிநொச்சி மாவட்டத்தினால் 2016ம் ஆண்டு கலைக்கிளி விருதும், 2017ம் ஆண்டு அரச தேசிய உயர் விருதான கலாபூஷண விருதும் வழங்கப்பட்டது.