ஆளுமை:செல்வரத்தினம், சின்னப்பு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:16, 14 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்= செல்வரத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வரத்தினம்
தந்தை சின்னப்பு
பிறப்பு 1949.11.29
ஊர் சின்னப்பல்லவராயன் கட்டு
வகை அண்ணாவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வரத்தினம், சின்னப்பு (1949.11.29 - ) பூநகரி, சின்னப்பல்லவராயன் கட்டுவனை பிறப்பிடமாகக் கொண்ட அண்ணாவி ஆவார். இவரது தந்தை குப்புசாமி சின்னப்பு. இவருடைய தந்தை பூநகரி நல்லூரில் அம்மன் கோயில் வைத்து பராமரித்து வந்துள்ளார். குஞ்சுப்பரந்தனை சேர்ந்த பூசாரி காத்தார் என்பவர் காத்தவராயன் நாடகம், கோவலன் கண்ணகி, மயில்ராவணன் போன்ற நாடகங்களை பழக்கி தகப்பனாரின் அம்மன் கோயில் திருவிழாவிற்கும், 1970ஆம் ஆண்டுகளில் மேளாய் அம்மன் கோயில் திருவிழாவிற்கும் மேடையேற்றினார்.

கலைசூழலிலும் கலைப்பாரம்பரிய நிறைந்த பரம்பரையிலும் உதயம் ஆகிய செல்வரத்தினம் அண்ணாவி அவர்கள் தனது சிறிய தகப்பனிடம் இருந்து பல கலையம்சங்களை கற்றுக் கொண்டதுடன், அவருடைய அம்மன் கதை புத்தகத்தினை பெற்று ஒரு கொப்பியில் எழுதினார். அதை நல்லதாகவும் அருள் நிறைந்ததாகவும் இருப்பதை உணர்ந்த அவர், அதனை நாடகமாக பழக்கி மேடையேற்றினார். பின்னர் 1979 ஆம் ஆண்டு தனது பரம்பரை கோயிலான சின்ன பல்லவராயன்கட்டு பிள்ளையார் கோயில் திருவிழாவிலும் மேடையேற்றினார்.அக்கராயன் அம்மன் கோயிலில் 30 தடவைக்கு மேலாக மேடையேற்றியதுடன் தற்காலத்திலும் தன் பணியினை தொடர்ந்தும் வருகிறார்.

இவருடைய கலைச்சேவையை பாராட்டி 2011ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவை விருது வழங்கி கௌரவித்தது. 50 வருடங்களுக்கு மேலாக இவருடைய கலைச்சேவையை பாராட்டி 2001 ஆம் ஆண்டு சிறந்த அண்ணாவியராகவும், 2011ஆம் ஆண்டு கலைக்கிளி விருதும் 2012 ஆம் ஆண்டு கலைத்தென்றல் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.