ஆளுமை:ஸூபைர், எம். ஸீ. எம்.
பெயர் | ஸூபைர், எம். ஸீ. எம். |
தந்தை | அல்ஹாஜ் ஏ. ஒ. எம். காஸிம்லெப்பை |
தாய் | ஸபியா உம்மா |
பிறப்பு | |
இறப்பு | 1999.05.16 |
ஊர் | கண்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஸூபைர், காஸிம் லெப்பை ( - 1999.05.16) கண்டி, கல்ஹின்னையைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவரது தந்தை அல்ஹாஜ் ஏ. ஒ. எம். காஸிம் லெப்பை; தாய் ஸபியா உம்மா. கல்ஹின்னை அல்-மனார் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று 1954 முதல் பண்டாரவளை ஸாஸிராக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இவரது முதலாவது கவிதை தினகரனிலும் முதலாவது இலக்கியக் கட்டுரை சுதந்திரனிலும் பிரசுரமானது. தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியதுடன் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் பேச்சு, கவியரங்கம், விவரணச் சித்திரம், கவிதா நாடகம், மருதமலர், இலக்கிய மஞ்சரி போன்ற நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார். மலரும் மனம், மனித வாழ்வு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். மணிக்குரல் சிறுவர் சஞ்சிகையை 1960 - 64 வரை வெளியிட்டுள்ளார். இவர் 'ஈழத்துக் கவிமணி' பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. வித்தியானந்தனிடமிருந்து பெற்றுக் கொண்டார். கவித்தாரகை பட்டமும் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1672 பக்கங்கள் 52-55