ஆளுமை:தம்பிராசா, சீ
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:45, 25 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தம்பிராசா|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | தம்பிராசா |
பிறப்பு | 1924.02.02 |
ஊர் | பெரியகல்லாறு, மட்டக்களப்பு |
வகை | ஆளுமை |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தம்பிராசா, சீ (1924.02.02) மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாற்றில் பிறந்த ஆளுமை. 1945-1946 காலப் பகுதியில் மட்/ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர் ஆனார். அதனைத்தொடர்ந்து பால பண்டிதர் பரீட்சையிலும் சித்தி எய்தியதுடன் மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சையிலும் ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத்தின் பிரவேசப் பரீட்சையிலும் சித்தி எய்தினார்.
தம்பிராசா அவர்கள் ஆற்றிய சமயப் பணியின் மூலம் இவர் பிரபலமானார். 1951-1971ஆம் ஆண்டு வரை பெரியகல்லாறு சைவ மகா சபையின் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். 1964ஆம்ஆண்டு இம் மகாசபையின் ஊடாக சமய விழா ஒன்றையும் நடத்தினார்.
இருபா இருபஃது (1993), கதிர்காமம் (2002) வரலாறு, , சங்க இலக்கிய சமுத்திர முத்துக்கள் (1995), பெரிய கல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் தோத்திரப் பாடல்கள் (2007) , கல்லாற்றுக் கடல் நாச்சியார் துதிமலர் (2007), பெயரி கல்லாறு மண்டபத்தடிப் பிள்ளையார் ஆலய வரலாறும் திருப்பொன்னூஞ்சலும் (2008), எனது இலக்கியச் சிந்தனைகள் (2010) ஆகிய இவரின் ஏழு நூல்கள் வெளிவந்துள்ளன.
விருதுகள்
தமிழ் ஒளி இந்து சமய கலாசார திணைக்களம்
வளங்கள்
- நூலக எண்: 8016 பக்கங்கள் 5-7