ஆளுமை:கனகரத்தினம், இரா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகரத்தினம்
பிறப்பு 1934.08.01
இறப்பு 2016.06.22
ஊர் யாழ்ப்பாணம் குரும்பசிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகரத்தினம், இரா (1934.08.01) யாழ்ப்பாணம் குரும்பசிட்டியில் பிறந்த ஆளுமை. 45 வருடங்களுக்கு மேலாக ஈழத் தமிழரின் வரலாற்றுத் தரவுகளை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

1956ஆம் ஆண்டு முதல் தமிழர் வரலாறு , பண்பாட்டு விழுமியங்களையும் சேகரிக்கும் தனது பணியினை ஆரம்பித்து 2015ஆம் ஆண்டு அகதியாக தமிழகத்தில் திருச்சியில் வாழும்வரை அயராது உழைத்தவர். உலகப் பேராளர்களை ஒன்றுதிரட்டி தமிழ் மொழியையும் பண்பாட்டினையும் பாதுகாக்க ஒரு பாதுகாப்பு இயக்கம் அமைக்க பல முயற்சிகளைச் செய்தவர். இவ் இயக்கத்தை பேராசிரியர் சாலை இளந்திரையன் அவர்கள் விருப்பப்படி பாதுகாப்பு இயக்கத்தை பண்பாட்டு இயக்கம் என மாற்றி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை 1974.08.01ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்தில் உருவாக்கினார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளராக 1974-1981ஆம் ஆண்டு வரை இருந்தார். இதன் முதலாவது மாநாட்டினை சென்னையில் 1977ஆம் ஆண்டும் இரண்டாம் மாநாட்டினை 1980ஆம் ஆண்டு மொறீசியசிலும் நடத்தினார். உலகத்தமிழர் குரல் பத்திரிகையின் ஆசிரியருமாவார். சீசரின் தியாகம், அலைகடலுக்கு அப்பால், உலகத் தமிழர் ஐக்கியத்தை நோக்கி, இறி யுனியன் தீவில் எங்கள் தமிழர், மொறீசியஸ் தீவில் எங்கள் தமிழர்கள், ஒரு குடையின் கீழ் உலகத் தமிழினம், ஒரு நூற்றாண்டு 1890-2011, இலங்கைத் தமிழர் வரலாறு மைக்ரோ பிலிம்களில் (நுண்படச்சுருளில்) முதலான பல வரலாற்று நூல்களுக்கு சொந்தக்காரர்.

அகில இலங்கை சமாதான நீதவானான திரு.இரா.கனகரத்தினம் கண்டியில் உலகத் தமிழர் ஆவணக்காப்பகத்தினை நிறுவி தனது பணிகளை செய்து வந்த காலத்தில் இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு சிலகாலம் சிறையில் இருந்தார். இவரது சேகரிப்பு கல்முனை, கண்டி, யாழ்ப்பாணம், கனடா, நோர்வே போன்ற இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தனது சேகரிப்புக்கள் நுண்படச் சுருள்களில் ஆவணமாக்கி அடுத்த சந்ததயினருக்கு எடுத்துச் செல்லும் உன்னதமான சேவையை நோர்வே அரச நிறுவனம் ஒன்று நிறைவேற்றியது.

விருதுகள்

ஆவண ஞானி – கனடா குரும்பசிட்டி நலன்புரி சபை – 1996.

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கனகரத்தினம்,_இரா&oldid=392745" இருந்து மீள்விக்கப்பட்டது