ஆளுமை:சக்திதாசன்,ச

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:24, 4 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சக்திதாசன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சக்திதாசன்
தந்தை சாமித்தம்பி
பிறப்பு
ஊர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

'சக்திதாசன்,ச கல்முனை பாண்டிருப்பில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சாமித்தம்பி. ஆரம்பக் கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாயத்திலும் இடைநிலை உயர்க் கல்வியை மட்டக்களப்பு உப்போடை இராமகிருஷ்ண சங்க சிவானந்த வித்தியாலயத்திலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்ழக பொறியியல் பீடத்தின் இயந்திய பொறியியலாளராகப் பட்டம் பெற்றார். இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தின் பட்டயப் பொறியியலாளராகவும் இலங்கை தன்னிய வாகனப் பொறியியலாளர் நிறுவகத்தின் உறுப்பினராகவும் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் உள்ளார்.

1967ஆம் ஆண்டு கலையுலகிற்குள் பிரவேசித்துள்ளார் சக்திதாசன். பாடசாலைல் கற்கும் போதே கவிதை எழுதி வருகிறார். சிவானந்த ஒலி என்னும் பெயரில் வெளியிடப்பட்ட சிறு கல்லச்சுச் சஞ்சிகைக்கு பத்திராதிபராய் இவர் இருந்துள்ளார். அக்கரைப்பற்றில் அருபாலிக்கும் பத்திரகாளியம்மனுக்கு காளியம்மன் கலிவெண்பா பாடி ஆலய விழாவில் அரங்கேற்றியுள்ளார். இலங்கை வானொலியின் கிராம சஞ்சிகை நிகழ்ச்சியொன்றில் இக்கவிதை அக்கரைப்பற்றில் வைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்டு வானொலியில் ஒலிபரப்பாகியது. வானொலி மஞ்சரி சஞ்சிகையில் இவர் எழுதிய கொழும்பு சென்றேன் என்ற குறுங்காவியமும் அக்கரைப்பற்றுச் சந்தை எனும் கவிதையும் இன்னும் சில பாக்களும் பிரசுரமாயின. கலைவாணன் இதழில் விலைமதிப்படைவாய் தமிழா எனும் தலைப்பில் எழுதிய கவிதை பிரசுரமாகிய.

அக்கரைப்பற்று விபுலானந்த சபை வெளியீடான யாழோசை சஞ்சிகையின் ஆசிரியராக இரு பிரதிகளை இவர் கையெழுத்தில் வெளியிட்டுள்ளார். எழுகின்றாய் இளந்தோழா, சுவாமி விபுலானந்தருக்குச் சமர்ப்பணம் ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. விபுலானந்த சபை்க் கீதம் இவரால் இயற்றப்பட்டது. சாவகச்சேரியில் உறைந்து அருள்பாலிக்கும் அன்னை மீனாட்சியின் பேரிலும் இத்தியடி வீரகத்தி விநாயகர் பேரிலும் பஜனைப் பாடல் புகழ்பா மாலைகள் புனைந்துள்ளார். ஸ்ரீ சத்திய சாயிதோத்திர பஞ்சகம் ஒன்றை இயற்றியுள்ளார்.

கிழக்கு பலக்லைக்கழக்த்தின் வெளியீடான கிழக்கொளி சஞ்சிகை, வெளி சஞ்சிகை ஆகியவற்றில் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. திருகோணஸ்வரம் முதல் உகந்தை வரை ஒன்பது ஆலயங்களைத் தரிசித்து அங்கேயே அரகேற்றிய பா மலர்களைத் தொகுத்து கவி யாத்திரை எனும் பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரம்மஸ்ரீ நீதிராஜ சர்மா அவர்ளால் 2003ல் இலங்கையில் நடைபெற்ற உலக இந்து மாநாட்டையொட்டி வெளியிடப்பட்ட இறுவட்டில் வற்றாப்பளைக்கண்ணகி அம்மன், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர், திருக்கோணஸ்வரம், திருக்கேதீச்சரம் பற்றிய சக்திதாசனினால் இயற்றப்பட்ட பாடல்களும் உள்ளடங்குகின்றன.

ஆங்கிலத்தில் கவிதை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் Poetry.com என்னும் இணையத்தில் திருக்குறளை அடியொற்றி கவிதைகள் எழுதியுள்ளார். 2003, 2004ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் முறையே வாஷிங்டனிலும், பிலடொல்பியாவிலும் நடைபெற்ற உலகளாவிய கவிதை மாநாட்டில் கவிதை வாசிக்க அழைப்பு இவருக்கு வந்துள்ளது. அவ்வாண்டுகளுக்கான கவியுராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவ் இணையப்பக்கத்தில் 45 கவிதைகளை படைத்துள்ளார். திறந்த பல்கலைக்கழகத்தின் அச்சாணி, நாணோசை, மருதம் மலர்களிலும், செங்கதிர், ஓலை, மாற்றம் சஞ்சிகைகளிலும் வீரகேசரி, தினகரன், உதயன் ஆகிய பத்திரிகைகளிலும் இவரின் கவிதை, கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இவர் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளதுடன் நாடகங்களை எழுதியும் நெறியாள்கை செய்தும் உள்ளார். வெண்பா, அறுசீர், எண்சீர் விருத்தகங்களிலும், பன்னிரு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்திலும், ஆசிரியப்பாவிலும், கலிவெண்பாவிலும், கட்டளைக்கலித்துறையிலும் பொதுவாகப் பாடல்களை இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 14917 பக்கங்கள் 4-20
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சக்திதாசன்,ச&oldid=390785" இருந்து மீள்விக்கப்பட்டது