ஆளுமை:கைருந்நிஸா, புஹாரி
பெயர் | கைருந்நிஸா |
தந்தை | முஹம்மது உமர் |
தாய் | உம்மு ஸகீனா |
பிறப்பு | |
ஊர் | கேகாலை தெதிகம |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
'கைருந்நிஸா, புஹாரி கேகாலை மாவட்டம் தெதிகம வறக்காபொலையைச் சேர்நதவர். இவரது தந்தை முஹம்மது உமர்; தாய் உம்மு ஸகீனா. வறக்காபொலை பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியின் கல்வி கற்றார். கவிதை, கட்டுரை , சிறுகதை எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் எழுத்தாளர். பாடசாலை காலத்திலேயே எழுத்துத்துறையில் ஈடுபட்டு வரும் இவரின் ஆக்கம் 1970ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் இடம்பெற்ற நவரசக் கோவை நிகழ்ச்சியில் முதலாவதாக இடம்பெற்றமையே இவரது எழுத்துலக பிரவேசத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இவரின் பெரும்பாலான ஆக்கங்களுக்கு வானொலியே களமைத்து கொடுத்துள்ளது.
பாடசாலை கூட்டுறவுச் சங்க செயலாளராகவும், ஐக்கிய முஸ்லிம் சங்க பிரதம கணக்காளராகவும் சேவையாற்றியதுடன் டட்லி சேனாநாயக்க உயர் தொழில்நுட்பக் கலலூரியில் தமிழ் மொழி மூலக் கற்கை நெறிக்குப் பணிப்பாளராகவும் இருந்ததுடன் பகுதி நேரி விரிவுரையாளராகவும் இவர் சேவையாற்றியுள்ளார்.