ஆளுமை:லக்ஸ்மி, ஸ்ரீகரன்
பெயர் | லஷ்மி |
தந்தை | சுப்பிரமணிய சர்மா |
தாய் | ஜெயலக்ஸ்மி |
பிறப்பு | 1981.05.15 |
ஊர் | |
வகை | |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
லக்ஸ்மி, ஸ்ரீகரன் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணிய சர்மா; தாய் ஜெயலக்ஸ்மி.. திருகோணமலை இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். இந்தியா சென்னை கலாஷேத்திரா பவுண்டேசன், ருக்மணிதேவி கல்லூரியில் நடனத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஏழு தந்தியில் வயலின் வாசிப்பதில் மிகவும் பிரபலமான இந்திய கலைஞரான சுப்பையர் இவரின் பாட்டனாருடைய தந்தையாவார். இவர் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தார்.
2006ஆம் ஆண்டு தொடக்கம் நடன ஆசிரியராகவும் நடன அமைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். அருஸ்ரீ கலையகத்தில் மூத்த கலைஞராகவும் விளங்குவதுடன் நடனவடிவமைப்பாளராகவும் விளங்குகிறார். கொழும்பு நுண்கலைக் கோயிலில் (Temple of Fine Arts) நடன ஆசிரியராக பல மாணவர்களை இக்கலையில் மிகவும் நுட்பமாக கற்பித்து வருகிறா்.
கலாமயி (KALAMAYI ACADEMY OF DANCE AND MUSIC) எனும் கலைக்கூடத்தின் ஸ்தாபகருமாக இருந்து வருகிறார்.
விருதுகள்
ஜப்பான் இலங்கை நட்புறவுச் சங்கமும் ஜப்பான் தூதரகமும் இணைந்து வழங்கிய சிறந்த நடன கலைஞருக்கான புக்கா (BUKA AWARD) விருது 2015ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.