ஆளுமை:ராதிகா, வின்சன்
பெயர் | ராதிகா |
தந்தை | கலைமணி |
தாய் | இராஜேஸ்வரி |
பிறப்பு | 1983.05.19 |
ஊர் | நாவலப்பிட்டி |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ராதிகா, வின்சன் நாவலப்பிட்டியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை கலைமணி; தாய் இராஜேஸ்வரி. ஆரம்பக் கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை நாவலப்பிட்டி புனித அந்தோணியார் மகளிர் கல்லூரியிலும் உயர் நிலைக் கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
2007ஆம் ஆண்டு இங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அறிவிப்பாளராக ஊடகத்துறைக்கு காலடி எடுத்த வைத்தள்ளார் ராதிகா. 2011ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேரத்ரா அலைவரிசையின் ஊடாக செய்தி வாசிப்பாளராகவும் தேசிய லொத்தர் சபையின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஊடகத்துறையில் கடமையாற்றி வரும் இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், பல விபரண நிகழ்ச்சிகளுக்கும் காட்டூன்களுக்கும் பின்னணி குரல் வழங்கியுள்ளார். கவிதை, சிறுகதை எழுதுதல் என பன்முகத்திறமைகளைக் கொண்டுள்ள ராதிகாவின் ஆக்கங்கள் மித்திரன் வார மஞ்சரி, மெட்ரோ நியூஸ் ஆகிய நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன.
விருதுகள்
2018ஆம் அண்டு சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான றைகம் விருதை பெற்றுக்கொண்டார்.
குறிப்பு : மேற்படி பதிவு ராதிகா, வின்சன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.