ஆளுமை:ஷம்ஸுன் நஹார், ஜெமீல் மரிக்கார்
பெயர் | ஷம்ஸுன் நஹார் |
தந்தை | தாஹா மரிக்கார் |
தாய் | ஹைஹானத்தும்மா |
பிறப்பு | 1937.12.13 |
ஊர் | பேருவளை |
வகை | எழுத்தாளர், கல்வியாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஷம்ஸுன் நஹார், ஜெமீல் மரிக்கார் (1937.12.03) பேருவளை, சீனன்கோட்டையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை தாஹா மரிக்கார்; தாய் ஹைஹானத்தும்மா. சீனன் கோட்டை முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் சீனன் கோட்டை ஜுனியர் ஆங்கிலப் பாடசாலையிலும் தர்கா நகர் முஸ்லிம் பெண்கள் மத்திய கல்லூரியிலும் உயர் கல்வியை கற்றார். 1956ஆம் அண்டு சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றார். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்ற இவர் தொடர்ந்து அதே பாடசாலையில் 28 வருடங்கள் சேவையாற்றியுள்ளார். பேருவளையில் முதல் பெண் ஆசிரியர் அதிபர் என்ற பதவிகளை வகித்தவர் என்ற பெருமைக்குரியவர். பெண் கல்விக்காக போராடி வெற்றிகள் பெற்றுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய மொழிகளில் இலக்கியம் படைத்துள்ளார். 1973ஆம் ஆண்டு சீனன் கோட்டை முஸ்லிம் மாதர் முன்னேற்றச் சங்கம் என்ற சங்கத்தை நிறுவி கல்வி, சமய, காலாசார துறைகளில் நற்பணிகள் பல புரிந்துள்ளார். இவரது முதலாவது நூலான ”இஸ்லாம் – இதுவே ஸராத்தல் முஸ்தகீம் (நேரான வழி) எனும் நூலை 2007ஆம் ஆண்டு வெளியிட்டார். The Truth என்ற பெயரில் ஆங்கில மொழியிலான ஒரு நூலையும் வெளியிட்டுள்ளார்.