ஆளுமை:எலிசபெத், தங்கராஜ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் எலிசபெத்
தந்தை தங்கராஜ்
தாய் சிவபதி
பிறப்பு 1985.10.31
ஊர் நுவரெலியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


எலிசபெத், தங்கராஜ் (1984.10.31) நுவரெலியா, தலவாக்கலையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை தங்கராஜ்; தாய் சிவபதி. ஆரம்ப, இடைநிலைக்கல்வியை தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை தலவாக்கலை தமிழ் மகாவித்தியாலயத்திலும் கற்றார். மும்மொழி டிப்ளோமா களனிப் பல்கலைக்கழகத்திலும் இரண்டாம் மொழி சிங்களம் உயர் கல்வி அரச கரும மொழித்திணைக்களத்திலும் கற்றுள்ளார். தற்போது ஆசிரியராகத் தொழில்புரிகிறார் எழுத்தாளர் எலிசபெத். 2003ஆம் ஆண்டு வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியான கவிதையின் ஊடாக எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். கவிதை, கட்டுரை, சிறுதை, நூல்விமர்சனம், நேர்க்காணல் என பன்முகத் திறமையைக்கொண்டவர். இலங்கையில் வெளிவரும் சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வானொலி, தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் (2014) வெளியான நூலில் எழுத்தாளர் எலிசபெத்தின் கவிதையும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

2015ஆம் ஆண்டு தடாகம் கலை இலக்கிய வட்டம் மற்றும் கனடா படைப்பாளிகள் உலகம் நடாத்திய விழாவில் ”கவியருவி” விருது 2012ஆம் ஆண் இலங்கை சிறந்த வலைத்தள பாவனையாளருக்கான விருது மற்றும் சான்றிதழ். (தமிழ்மொழி பாவனையாளர் சார்பாக) இணைய மற்றும் முகநூல் குழுமங்களில் பல விருதுகள் , சான்றிதழ்கள்.

குறிப்பு : மேற்படி பதிவு எலிசபெத், தங்கராஜ் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.