ஆளுமை:அமதுர் ரஹீம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமதுர் ரஹீம்
தந்தை துவான் தர்மா கிச்சிலான்
தாய் ரெழியா பீபீ
பிறப்பு
ஊர் கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமதுர் ரஹீம் கொழும்பில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை துவான் தர்மா கிச்சிலான்; தாய் ரெழியா பீபீ. தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் மிகவும் தேர்ச்சி பெற்றுள்ள இவர் ஆயிரக்கணக்கான ஆக்கங்களையும் இரு மொழிகளிலும் எழுதியுள்ளார். இவரின் சிங்கள மொழித் தேர்வை விசேட தகைமையாகக் கொண்டு அல்ஹிலால் மத்தியக் கல்லூரியில் சிங்கள மொழிப் பிரிவு பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். ரூபவாஹினி, வானொலி நாடகங்களில் நடித்துள்ளார். அவை முஸ்லிம் நிகழ்ச்சி நாடகங்களாகவும், சிங்கள மொழி நிகழ்ச்சி நாடங்களாகவும் இருந்தன. 1986ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் இளைஞர் இதய நிகழ்ச்சி ஒன்றில் ஒன்பது பாத்திரங்களை கொண்ட பத்து நிமிட நாடகத்தினை தனி ஒருவராக நின்று மிமிக்ரி முறையில் ஒன்பது பாத்திரங்களுக்கும் இவர் குரல் கொடுத்துள்ளார். இந் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டை பெற்றதெனத் தெரிவிக்கிறார் எழுத்தாளர். அத்துடன் புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சிகளை தயாரித்தும் வழங்கியுள்ளார். வானொலி வர்த்தக சேவையில் (விசித்ராங்ககீ) சிங்கள மொழி நிகழ்ச்சியிலும் குருகெதர நிகழ்ச்சியிலும் விசேட நிகழ்ச்சிகளின் போதும் மெல்லிசை, கிராமிய சஞ்சிகை இளைய இதயத்திலும் பாடியுள்ளார். 1991ஆம் ஆண்டு சஹன என்ற சிங்களப் பத்திரிகையில் ”வெளிநாட்டுக்கு பணிப் பெண்களாக செல்வோருக்கு பயிற்சிகள் அவசியப்படுவது ஏன்?” என்ற தலைப்பில் கட்டுரையே சிங்கள மொழியில் இவர் எழுதி முதலாவதாக வெளிவந்தது. மீப்புர சிங்கள பத்திரிகையின் எழுத்தாளருமாவார்.

2009ஆம் ஆண்டு கலாபூஷண விருது

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அமதுர்_ரஹீம்&oldid=286663" இருந்து மீள்விக்கப்பட்டது