ஆளுமை:நிறைமதி, க

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நிறைமதி
தந்தை கந்தையா
தாய் சுவர்ணவள்ளி
பிறப்பு 1968.03.30
இறப்பு -
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிறைமதி (1968.03.30) கண்டியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தையா; தாய் சுவர்ணவள்ளி. இவரின் கணவர் தசாவதாரன் சர்மா. ஆரம்ப, இடைநிலைக்கல்வியை வவுனியா இந்துக்கல்லூரி, உயர்தரம் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் கற்றார். நிறைமதி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமானி பட்டதாரியாவார். பாடசாலையில் உயர்கல்வி கற்கும் போதே எழுத்துத்துறைக்கு இவர் பிரவேசித்துள்ளார். கவிதையாக்கம், சிறுகதை ,நாடப்பிரதியாக்கம், நாட்டிய நாடகப் பிரதியாக்கம், பட்டிமண்டபம், கவியரங்கு, உரைநிகழ்வு, ஆய்வுரைகள் ஆகியதுறைகளில் தனது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகிறார் எழுத்தாளர் நிறைமதி. இவரின் ஆக்கங்கள் பல்வேறு சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. சொந்தமாக நூல்கள் எதனையும் வெளியீடு செய்யவில்லை. தமிழ் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசராக கடமையாற்றும் எழுத்தாளர், தனது ஆக்கங்கள் வேலைப்பழு காரணமாக நூல் உருவில் வெளிவில்லை எனக்குறிப்பிடுகிறார்.

விருதுகள்: கவியெழில், வித்யாரத்னா

வளங்கள்

  • நூலக எண்: 9541 பக்கங்கள் 91-92
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நிறைமதி,_க&oldid=283119" இருந்து மீள்விக்கப்பட்டது