ஆளுமை:தயானி, விஜயகுமார்
பெயர் | தயானி |
தந்தை | விஜயகுமார் |
தாய் | விஜயலெட்சுமி |
பிறப்பு | 1990.11.21 |
ஊர் | புறூக்சைட் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தயானி (1990.11.21) நுவரெலியா புறூக்சைட்டில் பிறந்தவர். இவரது தந்தை விஜயகுமார்; தாய் விஜயலெட்சுமி. ஆரம்ப கல்வி முதல் உயர்தர கல்வி வரை நுவரெலியா இராகலை தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார். உயர்தரத்தில் பாடசாலையில் மிகச் சிறந்த சித்தியினை பெற்று பாடசாலையில் முதல் பெறுபேறினையும் மாவட்ட வட்டத்தில் 4ஆவது இடத்தையும் பெற்றுள்ளமை விசேடமாகும். குப்பி லாம்புடன் படித்து 2010ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் பிரவேசித்தார். பேராதனை பல்கலைகக்கழத்தில் அரசறிவியல் முதுமாணி பட்டத்தை பெற்றுள்ளார். அத்துடன் மனித உரிமைகள் டிப்ளோமா கற்கையினை பேராதனைப் பல்கலைகழகத்தில் முடித்துள்ளார். பல்கலைக்கழக இதழான இளங்கதிர் இதழில் கவிதை எழுதியதோடு பல்கலைக்கழக மட்டத்தில் கட்டுரை போட்டிகளில் முதலிடத்தை பெற்றுள்ளார். 2015ஆம் ஆண்டு தொடக்கம் பத்திரிகைகளுக்கு அரசியல் மற்றும் சமூகம் சார் கட்டுரைகளை எழுதத் தொடங்கிய இவர் சில காலம் தமிழ்த்தந்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமையாற்றினார். இவரின் "அக்கினியாய் வெளியே வா" கவிதைத் தொகுப்பு நூல் சமூக விடுதலையை அடிப்படையாகக் கொண்ட புரட்சிகரமான கவிதைகளை உள்ளடக்கி இருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆசிரியர் பணி புரியும் இளம் எழுத்தாளர் தயானி விஜயகுமார் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுதி வருகிறார். மத்திய மாகாண சாகித்திய விருதும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படைப்புகள்
- அக்கினியாய் வெளியே வா (கவிதைத் தொகுதி)
குறிப்பு : மேற்படி பதிவு தயானி, விஜயகுமார் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.