ஆளுமை:பொன்னையா, நாகமுத்தர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:49, 14 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:பொன்னையா, நா., ஆளுமை:பொன்னையா, நாகமுத்தர் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னையா
தந்தை நாகமுத்தர்
தாய் தெய்வானைப்பிள்ளை
பிறப்பு 1892.06.22
இறப்பு 1951.03.30
ஊர் குரும்பசிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னையா, நாகமுத்தர் (1892.06.22 - 1951.03.30) யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், சமூக சேவையாளர். இவரது தந்தை நாகமுத்தர்; தாய் தெய்வானைப்பிள்ளை. இவர் குரும்பசிட்டியிலுள்ள மேரி பள்ளிக்கூடத்திலும் (அமெரிக்க மிசன் பாடசாலை) பின்னர் மகாதேவ வித்தியாசாலையிலும் கற்றார். பின்பு தமது குலத் தொழிலான வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டார்.

அச்சுத் தொழிலில் ஆர்வம் மிக்க இவர், சிறுகதை, நாடகம், நாவல் ஆகிய துறைகளிலும் இலக்கிய விமர்சனத் துறையிலும் சேவை செய்தார். தேசாபிமானி பத்திரிகை நிறுவனத்திலும் பணியாற்றினார். இவர் 'குரும்பசிட்டி சன்மார்க்க சபையை உருவாக்குவதில் முன்னின்று உழைத்ததோடு அதனூடாகச் சமய வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் அரும்பங்காற்றினார். இவர் 1918 இல் தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றதுடன் 1920 இல் ரங்கூனில் இருந்து வெளிவந்த சுதேச மித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். மகாவித்துவான் சி. கணேசையரிடம் தமிழ் கற்று யாழ்ப்பாணம் ஆரிய-திராவிடபாசாபிவிருத்திச் சங்கம் நடத்திய பிரதேச பண்டிதர் பரீட்சையிலும் கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாரப் பிரவேசப் பரீட்சையிலும் சித்தியடைந்தார்.

இவர் 1930 ஆம் ஆண்டு "ஈழகேசரி" வாரப் பத்திரிகையை ஆரம்பித்து நடாத்தியதுடன் இப்பத்திரிகை 1958 ஆம் ஆண்டு வரை வெளிவந்தது. 1933 இல் Ceylon Patriot என்ற ஆங்கில வாரப்பத்திரிகையை எஸ். சி. சிதம்பரநாதனை ஆசிரியராகக் கொண்டு நடத்தியதுடன் 1941 ஆம் ஆண்டில் Kesari என்ற ஆங்கில வார இதழை ஹன்டி பேரின்பநாயகம் என்பவரை ஆசிரியராகக் கொண்டும் சில ஆண்டுகள் நடத்தினார்.

யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் மாநாடுகளில் பங்குபற்றினார். மலையாளப் புகையிலை ஐக்கிய வியாபாரச் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றின் உறுப்பினராவார். 1950 ஆம் ஆண்டு அரசாங்கம் இவரை சமாதான நீதிபதியாக்கிக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 338 பக்கங்கள் (பின் அட்டை)
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 129-130

வெளி இணைப்புக்கள்