ஆளுமை:கனி, ஏ. எம்.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:13, 20 டிசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கனி |
பிறப்பு | 1930.07.21 |
இறப்பு | 1981.03.14 |
ஊர் | கண்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அகம்மது முஹம்மது கனி (1930.07. 21 - 1981.03.14) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர், யுனானி வைத்தியர், மதபோதகர், பன்நூலாசிரியர். உடத்தலவின்னை மடிகே ஜாமிஉல் அஸ்ஹா மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர் கண்டி சௌலதியா முஸ்லீம் வித்தியாலய அதிபராவார். இவர் எஸ். எஸ்.ஸி சித்தியடைந்ததுடன் மௌலவி தராதரப் பத்திரமும் பெற்றார். இவர் மத்திய மாகாண தப்லீக் இயக்கத்தின் ஆரம்ப கால ஊழியராக இருந்ததுடன் மார்க்க போதனைகளிலும் ஈடுபட்டார். இஸ்லாம், சமூகம், சட்டம் சார்ந்த நூல்களை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1672 பக்கங்கள் 37-41